விலை குறைவான காருடன் ஆட்டத்தை ஆரம்பித்த முன்னணி நிறுவனம்! காத்து வாங்கீட்டு இருந்த ஷோரூம்களில் மக்கள் கூட்டம்!
இந்திய சந்தையில் ஸ்கோடா (Skoda) நிறுவனத்தின் கார்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே உள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் பட்டாளத்தை தக்க வைத்து கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை உருவாக்கவும் ஸ்கோடா நிறுவனம் தற்போது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஸ்கோடா நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
ஸ்கோடா நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 2,377 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 4,133 ஆக உயர்ந்துள்ளது. இது 73.9 சதவீத வளர்ச்சி ஆகும். இது மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் மிகவும் அதிகமான கார்களை விற்பனை செய்த டாப்-10 நிறுவனங்களின் பட்டியலில் ஸ்கோடா நிறுவனத்திற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. இருந்தாலும் இந்த பட்டியலில் அதிக வளர்ச்சி சதவீதத்தை ஸ்கோடா நிறுவனம்தான் பதிவு செய்துள்ளது.
ஸ்கோடா அளவிற்கு வேறு எந்த நிறுவனமும் அதிக வளர்ச்சி சதவீதத்தை பதிவு செய்யவில்லை. வரும் மாதங்களில் ஸ்கோடா நிறுவனம் டாப்-10 பட்டியலில் ஒரு சில இடங்கள் முன்னேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) காரின் வருகைதான் இதற்கு காரணம்.

புத்தம் புதிய ஸ்கோடா கைலக் காரின் டெலிவரி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எனவே வரும் மாதங்களில் ஸ்கோடா கைலக் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. ஸ்கோடா கைலக் காரின் ஆரம்ப விலை வெறும் 7.89 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் 14.40 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்திய சந்தையில் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் கியா சொனெட் (Kia Sonet) ஆகிய கார்களுக்கு போட்டியாக ஸ்கோடா கைலக் கார் களமிறக்கப்பட்டுள்ளது.
இதுதவிர டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய கார்களுக்கும், ஸ்கோடா கைலக் விற்பனையில் கடுமையான சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்கோடா போன்ற ஒரு பிரீமியம் நிறுவனத்திடம் இருந்து கைலக் கார் மிகவும் குறைவான விலையில் களமிறக்கப்பட்டுள்ளது. எனவே கைலக் கார் இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.


Click it and Unblock the Notifications








