இனி இந்த கார்ல எல்லாம் ஸ்பேர் வீல் தரமாட்டாங்க! ஏன் தெரியுமா?

டாடா, மாருதி போன்ற நிறுவனம் இந்தியாவில் விற்பனையாகும் சிறிய கார்களில் ஸ்டெப்னி வீலை வழங்குவதை நிறுத்தியுள்ளது. படிப்படியாக இதைஒவ்வொரு வாகனமாக செய்து வருகிறது. டாடா பஞ்ச் இவி, டியாகோ இவி, சஃபாரி, ஹாரியர் உள்ளிட்ட கார்களுக்கும் மாருதியின் ஃபிராங்க்ஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற கார்களுக்கும் ஸ்டெப்னி வீல்களை வழங்குவதில்லை. இது ஏன்? சட்டப்படி இது சரியா? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களில் ஸ்டெப்னி டயர்களை வழங்க வேண்டும் என்பது சட்டம். வாகனம் நடுவழியில் பஞ்சராகி நின்றால் அதை அவர்களே சரி செய்ய இந்த ஸ்டெப்னி வீல் தேவைப்படும். இதனால் இதை கட்டாயம் வழங்க வேண்டும் என மோட்டார் வாகன சட்டம் சொல்லியிருந்தது.

Spare Wheel Stopped

ஆனால் கடந்த 2020ம் ஆண்டு மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. அதன்படி ஒரு வாகனத்தில் டியூப்லெஸ் டயர் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் இருந்தால், அந்த வாகனத்தை விற்பனை செய்யும் போது பஞ்சர் ரிப்பேர் கிட்டை மட்டும் வழங்கினால் போதும் ஸ்பேர் வீலை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என சட்டம் திருத்தம் செய்யப்பட்டது.

முதலில் இதை பார்க்கும் போது பலருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் இதை மெது மெதுவாக மக்கள் ஏற்றுக்கொள்ள துவங்கிவிட்டனர். இது இந்தியாவில் முதன் முறை அல்ல ஏற்கனவஐரோப்பிய மார்கெட்டில் இது போன்ற சட்டம் இருக்கிறது.

Spare Wheel Stopped

இந்நிலையில் டாடா மோட்டார் நிறுவனம் தனது டாடா பஞ்ச் இவி, டியாகோஇவி, மற்றும் அதன் பிளாக்ஷிப் கார்களான ஹாரியர், சஃபாரி போன்ற கார்களில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ள வேரியன்ட்களில் ஸ்பேர் வீலை வழங்குவதில்லை. மாருதியின் ஃபிராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா போன்ற கார்களில் சில வேரியன்ட்களில் ஸ்பேர் வீல்கள் கிடையாது. மாருதி விக்டோரிஸ் காரின் அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்பேர் வீல் இல்லாமல் தான் வந்துள்ளது.

இந்த ஸ்பேர் வீலை நீக்கியதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. முக்கியமாக சாலை கண்டிஷன் மேம்படுத்தப்பட்டுள்ளது. கார் உரிமையாளர்கள் பாராமரிப்பு விஷயத்தில் கவனமாக இருக்கின்றனர். டயர்கள் அதிகமாக உழைக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் பஞ்சர் வாய்ப்பை குறைக்கிறது. பஞ்சரானாலும் பஞ்சர் கிட்கள் உள்ளன. மேலும் டயர் பஞ்சர் கடைகளின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது.

Spare Wheel Stopped

பலருக்கும் இந்த தகவல் தெரியவில்லை. ஏன் இந்த ஸ்பேர் வீல் இல்லாத காரை வாங்கும் வாடிக்கையாளர்கள்க கூட கார் வாங்கிய பிறகு ஸ்பேர் வீலை தேடி அது இல்லை என தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இப்படி ஒரு விஷயத்திற்காக தான் ஸ்பேர் வீல்கள் வழங்கப்படுவதில்லை என அந்நிறுவன ஊழியர்கள் தெளிவாக முன்னரே விளக்கம் அளிப்பதில்லை.

மக்களுக்கும் ஸ்பேர் வீல் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்த விபரங்களை விழிப்புணர்வாக அந்நிறுவனம் செய்யவில்லை. இதனால் மக்களுக்கு இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இன்றும் மக்கள் பலரால் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலும் சாலை சிறப்பாக இருந்தாலும் கிராமப்புறம் மற்றும் நகர்புற சாலைகளில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் பஞ்சராக வாய்ப்புள்ளது என கருதுகிறார்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, September 28, 2025, 10:00 [IST]
English summary
Spare wheel stopped why companies remove car spare tyres
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X