டெஸ்லா கார்கள் இந்த விலைக்கா விற்கபோறாங்க? இந்த விலைக்கு வரபோகுதுனா எல்லாரும் வெயிட் பண்ணலாம் போலையே!

இந்திய கார் காதலர்களின் இப்போதைய மிகப் பெரிய எதிர்பார்ப்பாக டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் மின்சார கார் (Electric Car)-கள் மாறியிருக்கின்றன. இந்த நிறுவனம் நீண்ட இழுபறிக்கு பின்னர், அதன் வருகையை உறுதிப்படுத்துகின்ற விதமான செயல்களில் தற்போது களமிறங்கி இருக்கின்றது. கார் உற்பத்தியை ஆலையை இந்தியாவில் அமைக்கும் பணிகள் தொடங்கி வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பது வரையிலான பணிகளை அது முன்னெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவில் கார் உற்பத்தியைத் தொடங்கும் முன்னரே, கார் விற்பனை பணிகளைத் டெஸ்லா தொடங்க இருப்பதாகவும் தற்போது புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்காக டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட இருக்கின்றன. நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

Tesla s affordable ev expected in india

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. அந்தவகையில், ஜெர்மனியில் செயல்பட்டு வரும் ஆலையில் இருந்தே டெஸ்லா கார்கள் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனைச் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே டெஸ்லா நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார்களை என்ன விலையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்கிற தகவல்களும் தற்போது தெரிய வந்திருக்கின்றது.

ரூ. 21 லட்சம் என்கிற விலையிலேயே டெஸ்லா நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைச் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. அதேவேளையில், டெஸ்லா நிறுவனம் இதுவரை விலை பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த நிலையிலேயே அரசல்புரசலாக விலை பற்றிய தகவல் வதந்தியாக பரவிக் கொண்டிருக்கின்றன. ஆனால், எதிர்காலத்தில் நிறுவனம் இந்த விலையில் அதன் கார்களை விற்பனைச் செய்வதற்கான சூழல் இருக்கின்றது என்பதை நாம் இங்கே ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால், இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைவதற்கான பணிகள் இப்போது மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டெஸ்லா நிறுவனத்தின் மலிவு விலை மின்சார கார் மாடலாக மாடல் 2 (Model 2) இருக்கின்றது. 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்கிற விலையிலேயே உலக சந்தையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. இதன் உற்பத்தி பணிகள் இந்தியாவில் தொடங்கப்படும் எனில், அதுவே ரூ. 21 லட்சத்திற்கும் குறைவான விலையில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இதையும் உறுதியாக சொல்ல முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாடலை இறக்குமதி செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் எனில் அதன் விலை ரூ. 25 லட்சத்தைக் கூட நெருங்கலாம். அதாவது, உலக அளவில் கம்மி விலையில் விற்பனைச் செய்யப்படும் கார் இறக்குமதி செய்யப்படுவதனால் அதன் விலை வரியின் காரணமாக சற்றே காஸ்ட்லியானதாக மாறக்கூடம்.

இதை வைத்தே இப்போதைக்கு டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் குறைவான விலையில் விற்பனைக்கு வருவதற்கான சூழல் இல்லை என கருதப்படுகின்றது. அதேவேளையில், இந்த நிறுவனம் முதலில் அதன் மாடல் 3 (Model 3) எலெக்ட்ரிக் காரையே விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார் பிரிவில் போட்டு மிகுந்த பிரிவாக மாறி இருக்கின்றது. இந்த பிரிவில் மிக சிறந்த போட்டியாளராக டாடா மோட்டார்ஸ், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் மாறியிருக்கின்றன. இந்த நிலையிலேயே தன்னுடைய வருகையை பதிவு செய்ய முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது, டெஸ்லா.

Source: CNBC TV18

More from DriveSpark

Article Published On: Thursday, February 20, 2025, 19:54 [IST]
English summary
Speculation grows surrounding teslas launch of affordable ev in india priced at rs 21 lakh
மேலும்... #tesla #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+