ரசிகர்கள் எவ்வளவு போட்டோ கேட்டாலும் போஸ் குடுக்குறாரு! ஐபிஎல்-வீரர் இவ்வளவு காஸ்ட்லியான கார்ல போறாரா?
பிரபல கிரிக்கெட் வீரரான இஷான் கிஷன் சமீபத்தில் ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் இருந்து காஸ்ட்லியான கார் ஒன்றில் ஏறிச்சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர். இந்த காரில் ஏறுவதற்கு முன்பு இவர் தனது ரசிகர்களுக்கு செல்பி போட்டோ எடுக்க போஸ் கொடுத்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது. பலர் இதை பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிக்கொணட்டிருப்பவர் இஷான் கிஷன், இவர் இதற்கு முன்பு மும்பை அணியில் விளையாடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் சன் ரைசஸ் அணிக்கு வந்த பிறகு முதல் போட்டியிலேயே சதம் அடித்தார். இந்நிலையில் இவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு 5 ஸ்டார் ஓட்டலில் இருந்து வெளியே வந்து ஒரு காஸ்ட்லியான காரில் ஏறிச்செல்லும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர். இந்த காரில் ஏறுவதற்கு முன்னர் இவர் தனது ரசிகர்களுடன் செல்பி போட்டாவிற்கு போஸ் கொடுத்தார். இதுவும் பெரிய விஷயமாக பேசப்படுகிறது. இந்நிலையில் இவர் ஏறிச்சென்ற கார் குறித்து பலர் தேடி வருகின்றனர். இது சாதாரண கார் போல அல்லாமல் காஸ்ட்லியான கார் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. இது என்ன கார் என பலர் தேடி வருகின்றனர்.
இந்த வீடியோவில் அவர் ஏறிச்செல்வது கியா நிறுவனத்தின் கார்னிவெல் கார் ஆகும். கியா நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகிக்கொண்டிருக்கும் கார்களில் ஒன்றாக இந்த கார் இருக்கிறது. இந்த கார் தற்போது லிமோசைன் பிளஸ் என்ற ஒரே ஒரு வேரியன்டில் மட்டுமே விற்பனையாகி வருகிறது. இந்த கார் இந்தியாவில் ரூ75.63 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதில் பல்வேறு வசதிகள் இருக்கிறது.

இந்த காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 2.1 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 140 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளுது. இந்த இன்ஜின் நேரடியாக ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் லிட்டருக்கு 14.85 கி.மீ மைலேஜை வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள சிறப்பம்சமே இதன் அளவு தான். பெரிய காராக வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதில் அதிக இட வசதி இருக்கிறது. இது போக இந்த காரின் டிசைன் மொழியும் மக்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கேபின் பகுதி எல்லாம் அதிக இடவசதி மற்றும் நல்ல காற்றோமான வடிவமைப்பு கொண்டதாக இருக்கிறது. பெரிய பூட் வசதி இருப்பதால் இந்த காரில் அதிகமான லக்கேஜை எடுத்து செல்ல முடியும்.

இந்த காரின் இன்ஜின் 440 என்எம் டார்க் திறனை வழங்குவதால் பவர்ஃபுல்லான காராக இருக்கிறது. அதே நேரத்தில் சிறப்பான ரைடு குவாலிட்டியும் இந்த காரில் இருக்கிறது. இந்த கார் பள்ள மேடுகளில் பயணிக்கும் போதும் சிறப்பான பயண அனுபவத்தை வழங்குகிறது. இந்த காரில் உள்ள பிரச்சனை பெரிய காராக இருப்பதால் சிட்டி டிராஃபிற்குள் ஓட்டு சற்று சிரமம் மேலும் இந்த காரின் ஸ்டிரயிங் வீல் ரெஸ்பான்ஸிவ் சற்று குறைவாக தான் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரை மக்கள் பலர் விரும்பி வாங்கி வருகின்றனர். விலை அதிகமாக இருப்பதால் பெரும்பணக்காரர்கள், பிரபலங்கள் மட்டுமே இந்த கார் வாங்க கூடிய சூழ்நிலை இருக்கிறது. இந்த காரில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கிறது. இதனால் இந்த காரை கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் வாங்கி பயன்படுத்தி வருகிறார். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









