இந்த புதுமுக பிராண்டும் இந்தியால கால் தடம் பதிக்க போகுதா! டெஸ்லா-வின்ஃபாஸ்ட் வரிசையில் இணைகிறது லீப்மோட்டார்!

வாகனங்களுக்கான மிகப் பெரிய சந்தையாக இந்தியா விளங்குகின்றது. இதனாலேயே உலகின் முன்னணி பிராண்டுகளின் கண்கள் நம் நாட்டின் மீது உள்ளன. இந்தியா மீது கண்களை வைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், ஒரு சில பிராண்டுகள் கால் தடம் பதிப்பதற்கான பணியிலும் களமிறங்கி இருக்கின்றன. அந்தவகையில், வெகு விரைவில் உலக புகழ்பெற்ற வின்ஃபாஸ்ட் (VinFast) மற்றும் டெஸ்லா (Tesla) ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் வருகையை பதிவுச் செய்ய இருக்கின்றன. இரண்டு மின்சார வாகன உற்பத்தியில் பெயர்போன பிராண்டுகள் ஆகும்.

இவர்கள் மட்டுமல்ல மற்றுமொரு புதுமுக நிறுவனம் இந்தியாவில் அதன் கால்தடத்தைப் பதிக்க இருப்பது இப்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்டெல்லண்டிஸ் (Stellantis) குழுமத்திற்கு சொந்தமான சீன நிறுவனம் லீப் மோட்டார் (Leapmotor)-ரே தன்னுடைய வாகனங்களை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

Stellantis to launch leapmotor ev brand in india

லீப் மோட்டார், ஓர் மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருக்கின்றது. இந்த சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே வின்ஃபாஸ்ட் மற்றும் டெஸ்லா ஆகிய பிராண்டுகள் இந்தியாவில் தங்களின் வருகையை பதிவுச் செய்ய இருக்கின்றனர்.

இவர்களின் வரிசையிலேயே தற்போது லீப் மோட்டாரும் இணைய இருக்கின்றது. மேலும், ஸ்டெல்லண்டிஸ் இந்தியாவில் களமிறக்க இருக்கும் நான்காவது வாகன பிராண்டு லீப் மோட்டார் என்பது கவனிக்கத்தகுந்தது. ஏற்கனவே அந்த நிறுவனம் அதன் ஜீப் (Jeep), சிட்ரோன் (Citroen) மற்றும் மஸேராட்டி (Maserati) ஆகிய பிராண்டுகளின் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டிலேயே இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட சில காரணங்களுக்காக அது தள்ளிப்போடப்பட்டு, இப்போது மீண்டும் அதன் வருகை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள் லீப் மோட்டார் நிறுவனத்தின் வாகனங்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உள்ளிட்டவற்றையே மேற்கொள்ள இருக்கின்றது. சீன அல்லாத தயாரிப்புகளையே இந்தியாவில் அது இறக்குமதி செய்யும் என கூறப்படுகின்றது. ஆகையால், இந்தியாவில் இந்த நிறுவனத்தின் கார்களுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்பே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் சிகேடி வாயிலாகவே இந்த வாகனத்தை லீப் மோட்டார் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஆகையால், உதிரி பாகமாக இறக்குமதி செய்து அதை இந்தியாவில் வைத்து கட்டி விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதுமட்டுமல்ல எதிர்காலத்தில் உள்ளூரில் வைத்தும் தன்னுடைய வாகனங்களை அது உற்பத்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, சில குறிப்பிட்ட மாடல்களை அது பிரத்யேகமாக இறக்குமதி செய்து விற்பனைக்கு வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதே வரவேற்பு லீப் மோட்டாரின் மின்சார வாகனங்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் வருகைக்கு பின்னரே என்ன மாதிரியான டிமாண்டை அது நாட்டில் பெறுகின்றது என்பது தெரிய வரும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 26, 2025, 14:24 [IST]
English summary
Stellantis moves to launch leapmotor ev brand in india to capitalise on growing market
மேலும்... #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+