மாருதி கார்கள் மீது மட்டும் மக்களுக்கு எப்படி இவ்வளவு நம்பிக்கை? மற்ற கார் கம்பெனிகள் அனைத்தும் திண்டாடுது!!

எஸ்யூவி (SUV) கார்கள் அவற்றின் உடலமைப்பை பொறுத்து பல வகைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. அத்தகைய வகைகளுள் ஒன்றுதான், 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட சப்-காம்பெக்ட் (Sub-Compact) எஸ்யூவி கார்கள் ஆகும். அளவில் சிறியதாக இருப்பதினாலேயே மக்கள் அதிக பேரால் வாங்கப்படும் எஸ்யூவி கார்களாக இவை உள்ளன. இருப்பினும், கடந்த ஜூன் மாதத்தில் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனை குறைந்திருப்பதை தற்போது வெளியாகி இருக்கும் புள்ளி விபரங்கள் வெளிக்காட்டுகின்றன.

இந்தியாவில் தற்போதைக்கு 14 விதமான சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq) மற்றும் கியா சிரோஸ் (Kia Syros) என்கிற இரு மாடல்கள் கடந்த 1 ஆண்டில் மார்க்கெட்டில் புதியதாக அறிமுகம் செய்யபட்டவை ஆகும். அப்படியிருந்தும், கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் கடந்த ஜூனில் 13 ஆயிரத்து 536 சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

sub-compact suv car sales

கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 665 ஆகும். அதுவே, 2024 ஜூனில் 95 ஆயிரத்து 201 சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 14 சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் மாடல்களில் கடந்த ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்டவை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) ஆகும்.

இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றாக விளங்கும் பிரெஸ்ஸா கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 14 ஆயிரத்து 507 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே, 2024 ஜூனில் 13 ஆயிரத்து 172 பிரெஸ்ஸா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

sub-compact suv car sales

இந்த வகையில் பார்க்கும்போது, பிரெஸ்ஸா கார்கள் விற்பனை ஆனது 1,335 யூனிட்கள் அதிகரித்துள்ளது. பிரெஸ்ஸாவுக்கு அடுத்த 2வது மற்றும் 3வது இடங்களில் இரு டாடா கார்கள் உள்ளன. டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் பஞ்ச் (Punch) என்பன அவை ஆகும். இதில் நெக்ஸான் கடந்த மாதத்தில் 11 ஆயிரத்து 602 யூனிட்களும், பஞ்ச் 10 ஆயிரத்து 446 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2வது மற்றும் 3வது இடங்களை பிடித்திருப்பினும், இந்த டாடா கார்களின் விற்பனையும் 2024 ஜூன் மாதத்தை விட இந்த ஜூன் மாதத்தில் குறைந்துள்ளது. குறிப்பாக, டாடா பஞ்ச் கார்களின் விற்பனை எண்ணிக்கை சுமார் 7,792 யூனிட்கள் குறைந்துள்ளது. இந்த வரிசையில் 4வது இடத்தில் மீண்டும் ஒரு மாருதி காராக ஃபிரான்க்ஸ் (Fronx) உள்ளது.

sub-compact suv car sales

2024 ஜூனில் 9,688 ஃபிரான்க்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், 2025 ஜூனில் 9,815 ஃபிரான்க்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 5வது இடத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் 7,089 யூனிட்கள் விற்பனை உடன் இருக்க, 6வது மற்றும் 7வது இடங்களில் ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சொனெட் கார்கள் முறையே 6,858 மற்றும் 6,658 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன.

Sub-Compact SUVs (3.8- 4 Meters) Jun'25 Jun'24 Diff Growth (%)
Maruti Suzuki Brezza 14,507 13,172 1,335 10.14%
Tata Nexon/ EV 11,602 12,066 -464 -3.85%
Tata Punch/ EV 10,446 18,238 -7,792 -42.72%
Maruti Suzuki Fronx 9,815 9,688 127 1.31%
Mahindra XUV 3XO 7,089 8,500 1,411 -16.60%
Hyundai Venue 6,858 9,890 -3,032 -30.66%
Kia Sonet 6,658 9,816 -3,158 -32.17%
Hyundai Exter 5,873 6,908 -1,035 14.98%
Skoda Kylaq 3,196 0 - -
Toyota Taisor 2,408 3,185 -777 -24.40%
Nissan Magnite 1,313 2,107 -794 -37.68%
Kia Syros 774 0 - -
Renault Kiger 755 1,150 -395 -34.35%
Maruti Suzuki Jimny 371 481 -110 -22.87%

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்து இருப்பவை கடந்த ஜூன் மாத விற்பனையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட முதல் ஏழு சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களை மட்டுமே ஆகும். இவை இல்லாமல், இன்னும் ஏழு கார் மாடல்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த மாதத்தில் மாருதி சுஸுகியின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களை தவிர்த்து மற்ற நிறுவனங்களின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, July 18, 2025, 16:14 [IST]
English summary
Sub compact suv car sales in india in june 2025 check all details here
மேலும்... #car sales #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X