ஒரு பைசா கூட தரமுடியாது! வாகன விபத்தில் இறந்தவர் மனைவிக்கு கோர்ட் வச்ச குட்டு!

வாகனங்களில் பயணிப்பவர்கள் சொந்த தவறுகளால் ஏற்படும் விபத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீட்டு தொகையை வழங்க தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. வாகன இன்சூரன்ஸ் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கின் மேற் முறையீட்டில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரவிஷா என்பவர் தனக்கு சொந்தமான காரில் அவரது தந்தை, சகோதரி மற்றும் அவரது குழந்தைகளுடன் அரசிகரே பகுதியில் இருந்து மல்லசந்திரா என்ற பகுதிக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ரவிஷா காரை வேகமாக ஓட்டி சென்றாதாக கூறப்படுகிறது.

Supreme Court Insurance Case

ஒரு கட்டத்தில் கார் அவரது கட்டுப்பாட்டை இழந்தை தறிகெட்டு ஓடியது. அப்பொழது இவர் ஸ்டியரிங்கை திரும்பும் போது கார் அதிகமாக திரும்பியது. இதனால் கார் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ரவிஷாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனின்றி இவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் ரவிஷா உயிரிழந்த நிலையில் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் இன்சூரன்ஸ் பணத்தை கேட்டு வாகன இன்சூரன்ஸ் எடுத்திருந்த நிறுவனத்திடம் விண்ணப்பித்தனர். அவர்கள் விபத்து குறித்து விசாரித்த போது குறிப்பிட்ட விபத்து ரவிஷாவின் கவனக்குறைவாலும், விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதாலும் நிகழ்ந்தது என்பதால் இன்சூரன்ஸ் தொகையை வழங்க மறுத்துவிட்டனர்.இதையடுத்து ரவிஷாவின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் கோர்ட்டில் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.

Supreme Court Insurance Case

அப்பொழுது வழக்கை விசாரித்த கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் ரவிஷா செய்த தவறால் தான் விபத்து நிகழ்ந்தது என்பதால் இன்சூரன்ஸ் பணத்தை வழங்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ரவிஷா குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுவில் நடந்த விசாரணையில் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. ரவிஷா கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டதாகவும், தனி மனித தவறு காரணமாக விபத்து நடந்தால் அந்த விபத்திற்கு இன்சூரன்ஸ் தொகையை கோர முடியாது என உத்தரவிட்டுள்ளது.

Supreme Court Insurance Case

தற்போது கோர்ட் இப்படியான உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் இந்த உத்தரவை அடிப்படையாக கொண்டு இது போன்ற மற்ற வழக்குகளில் உதாரணமாக எடுத்து தனி நபர் தவறுகளால் விபத்து நடந்தால் அதற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கிளைம் தரவில்லை என்றால் அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தால் அது தள்ளுபடியாக வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனத்திற்கான இன்சூரன்ஸ் என்பது வாகனம் விபத்தில் சிக்கும் வாய்ப்பு இருப்பதால் அதனால் ஏற்படும் இழப்புகளை தவிர்ப்பதற்கானது. நீங்கள் வாகனம் சட்ட விதிமுறைகளை மீறி வேண்டும் என்ற அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டும் போது அது விபத்தில் சிக்கினால் அதற்கான இன்சூரன்ஸ் கிளைம் கிடைக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, July 4, 2025, 17:15 [IST]
English summary
Supreme court insurance case no compensation for driver negligence
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X