இந்திய கார்களை மொத்தமாக ஆட்டைய போடும் வெளிநாட்டு மக்கள்! இவ்வளவு காரை வாங்குறாங்களா?
இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை மிக வேகமாக எஸ்யூவி பக்கம் நகர்ந்து வருவது நமக்கு கண் கூடாக தெரிகிறது. மக்கள் பலர் பழக்கமான சாதாரண பயணிகள் காரை விட எஸ்யூவி காரர்களை அதிகம் விரும்புகிறார்கள். இது உள்நாட்டு விற்பனை மட்டுமல்லாமல் ஏற்றுமதியிலும் நமக்கு தெளிவாக தெரிகிறது. இது குறித்த புள்ளிவிபரங்கள் வெளியாகி உள்ளன. விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் உள்ள மார்க்கெட்டில் எஸ்யூவி கார்கள் எம்பிவி கார்கள் மற்றும் அதிக நபர்கள் பயணிக்கும் கார்கள் அதிக ஈர்ப்பை பெற்று வருகின்றன. முக்கியமாக முதல் முறையாக கார் வாங்குபவர்கள் கூட இந்த செக்மெண்டில் தான் காரை வாங்க விரும்புகிறார்கள். குறைந்த விலை கார்களை விட இந்த கார்களுக்கு தான் டிமாண்ட் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இதே டிரெண்ட் ஏற்றுமதியிலும் நமக்கு பிரதிபலிக்கிறது. இந்தியாவில் அதிக அளவில் இந்த ரக காரர்கள் தான் ஏற்றுமதியாவது நமக்கு தெளிவாக தெரிய வந்துள்ளது.

கடந்த நவம்பர் மாத புள்ளி விபரங்களை பொருத்தவரை மொத்தம் 42,993 எஸ்யூவி ரக கார்கள் ஏற்றுமதி ஆகியுள்ளன இதுவே பயணிகள் என்றால் 4, 519 கார்கள் தான் ஏற்றுமதியாகி உள்ளன. சாதாரண பயணிகள் கார்களை விட கார்கள் அதிகமாக ஏற்றுமதியாகியுள்ளது. ஆனால் இந்த ஏற்றுமதி இப்பொழுது தான் நடந்துள்ளது. இதற்கு முன்னர் எல்லாம் சாதாரண பயணிகள் கார்தான் அதிக அளவில் ஏற்றுமதி ஆகியுள்ளன. அதனால் தற்போது இந்த டிரெண்ட் மாறி வருவது நமக்கு தெளிவாக தெரிகிறது.
நடப்பு 2025ம் ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மொத்தம் 3.04 லட்சம் கார்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளன அதில் 2.71 லட்சம் கார்கள் எஸ்யூவி ரக காரர்களாக உள்ளன. இது கடந்தாண்டு ஏற்றுமதியான எஸ்யூவி கார்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமாகும்.

கார் ஏற்றுமதியில் மாருதி நிறுவனம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒட்டுமொத்த கார் ஏற்றுமதியில் 47 சதவீதமான பயணிகள் கார்கள் மாருதி நிறுவனத்தின் கார்களாக உள்ளன. அடுத்த இடத்தில் ஹுண்டாய் கார் இருக்கிறது. மாருதி நிறுவனமும் ஹுண்டாய் நிறுவனமும் சேர்த்து இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் ஒட்டுமொத்த பயணிகள் கார் ஏற்றுமதியில் 81% பங்கை வைத்துள்ளனர். மாருதியை தொடர்ந்து நிஸான் டொயோட்டா ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களும் வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி கார்கள் ஏற்றுமதியில் அதிகம் செலுத்தி வருகிறது. 100 கார்கள் ஏற்றுமதியானால் அதில் 62 கார்கள் நான்கு மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி கார்களாகவே உள்ளன. இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் கார்களுக்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

எலெக்ட்ரிக் கார்கள் ஏற்றுமதியும். சிறப்பாக இருக்கிறது. தற்போது பயணிகள் காரில் 10 கார்கள் ஏற்றுமதியானால் அதில் எட்டு கார்கள் நான்கு மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட கார்களாகவே உள்ளன. இந்தியா தற்போது சர்வதேச அளவில் compact மற்றும் அதிக மதிப்பு கொண்ட கார்களின் ஏற்றுமதிக்கு ஒரு சர்வதேச ஹப்பாகவே இருக்கிறது. என்ட்ரி லெவல் கார்களை தாண்டி மக்கள் பலர் எஸ்யூவி கார்கள் பக்கம் நகரத்தை தொடங்கி விட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூ வி கார்களுக்கு தனி மதிப்பு இருக்கும் நிலையில் ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்தி வருவதால் பலர் எஸ்வி காரர்களை விரும்பி வாங்கி வருகிறார்கள் இந்தியர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் இந்திய கார்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது இந்தியாவில் உள்ள சிவிக்கார்களை வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் திருடிக் கொண்டு செல்கிறார்கள் என்றே சொல்லும் அளவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி நடக்கிறது.


Click it and Unblock the Notifications









