எஸ்யூவி விற்பனையில் விழுந்த மரண அடி! இனி இந்த கார் தான் டிரெண்ட்!
இந்தியாவில் கொரோனா காலத்திற்கு பிறகு எஸ்யூவி கார்களின் விற்பனை கணிசமான அளவு அதிகரித்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக விற்பனை குறைந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவிய பிறகு மக்கள் பலர் பொது போக்குவரத்தை விட சொந்தமாக கார் வாங்க வேண்டும். அதில்தான் பாதுகாப்பான பயணம் கிடைக்கும் என நம்பினர். இந்நிலையில் குடும்பத்துடன் பயணிக்க அதிக இடவசதி கொண்ட கார்களுக்கான தேவை மக்கள் மத்தியில் எழுந்தது. இதனால் மக்கள் பலர் எஸ்யூவி கார்களை நோக்கி நகர்ந்தனர். இந்த கார்களின் விற்பனை வளர்ச்சியும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இடி ஆட்டோ தளத்தில் வெளியான தகவலின்படி கடந்த 5 ஆண்டுகளில் முதன் முறையாக எஸ்யூவி கார்களின் விற்பனை குறைந்ததுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் 1.75 ,வ்சம் எஸ்யூவி கார்கள் வறி்பனையாகியுள்ளன. இது கடந்தாண்டு இதே மாத விற்பனையை ஒப்பிடும் போது 2.1 சதவீதம் குறைவாகும்.
இது மட்டுமல்ல இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 5.72 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டு கால விற்பனையை ஒப்பிடும் போது 5.6 சதவீதம் விற்பனை வளர்ச்சி தான் என்றாலும் கடந்த 5 ஆண்டுகளில் காலாண்டு வளர்ச்சியில் முதன் முறையாக ஒரு இலக்க வளர்ச்சியை பெற்றது. இதற்கு முன்னர் தொடர்ந்து இரண்டு இலக்க வளர்ச்சி தான் இருந்தது. அப்பொழுதே வளர்ச்சி கணிசமாக குறைந்து வருவது தெரிந்தது.

இது போக ஜேட்டோ டைனமிக்ஸ் டேட்டாவின்படி கடந்த ஜூன் மாதம் 1,71,341 மெயின் ஸ்டிரீம் எஸ்யூவி கார்களும் 3,660 சொகுசு எஸ்யூவி கார்களும் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஜனவரி மாத விற்பனை ஒப்பிடும் போது 19 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கிறது. ஜனவரி மாதம் 2,11,946 கார்கள் விற்பனையாகியிருந்தது. சுமார் 40,605 கார்கள் இந்த செக்மெண்டில் 6 மாதத்தில் விற்பனை குறைந்துள்ளது.
எஸ்யூவி கார்கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்த நிலையில் தற்போது விற்பனை சரிவடைந்துள்ளது. ஆனால் இது இந்த காரின் பிரபலம் குறைவதாக கருத முடியாது. இதற்கு இணையாக மற்ற செக்மெண்டில் ஏற்றத்தை காண முடியவில்லை. ஐடி செக்டாரில் பெரிய அளவில் பணி நீக்கம், அரசியல் மாற்றங்கள், பருவ நிலை மாற்றம், சிறிய அளவில் ஏற்பட்ட சவால்கள் எல்லாம் மக்கள் கார் வாங்குவதை தடுத்திருக்கலாம். இதனால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம்.

அதே நேரம் எஸ்யூவி செக்மெண்ட் வேகமாக குறைந்தாலும் சமீப காலமாக எம்பிவி செக்மெண்ட் கணிசமான வளர்ச்சியை சந்தித்து வருவதை காண முடிகிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இதை புரிந்து கொண்டு எம்பிவி செக்மெண்டில் வரிசையாக கார்களை களம் இறக்க துவங்கிவிட்டனர். சியாரா காரை டாடா நிறுவனம் இறக்குகிறது. மாருதி நிறுவனம் எஸ்குடோ காரை களம் இறக்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒவ்வொரு டிரெண்டும் குறிப்பிட்ட காலத்திற்கு தான்
இருக்கும். இந்தியாவில் எஸ்யூவி டிரெண்ட் வேகமாக வளர்ந்து வந்த நிலையில் தற்போது நிலை தன்மையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை மீண்டும் வளர்ச்சிக்கு கொண்டு வர இதில் பல்வேறு உட்பிரிவு செக்மெண்ட்களை கொண்டு வர வேண்டும். இந்த கார்கள் மீண்டும் இதை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும்.


Click it and Unblock the Notifications









