மார்கெட்டின் ரொம்ப ஸ்பெஷலான வாகனமா மாற போகுது.. சுஸுகி-டொயோட்டா இணைந்து தயாரித்த வேன்.. காரைபோல பயன்படுத்தலாம்
ஒரு பெரிய குடும்பம் ஒன்றாக அமர்ந்து செல்வதற்கு ஏற்ற வாகனத்தை இரண்டு ஜாம்பவான் நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுஸுகி (Suzuki) மற்றும் டொயோட்டா (Toyota), இவர்களே அந்த பெரிய குடும்பம் பயணிக்கின்ற மாதிரியான வேனை தயாரித்த நிறுவனங்கள் ஆகும். ஆனால், இப்போதைக்கு இந்த வாகனம் கமர்சியல் பிரிவை மையப்படுத்தியே தயார் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இ எவ்ரி (e-Every) இதுவே அந்த வேனின் பெயர் ஆகும்.
ஆம், இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் வேகன் ஆகும். எவ்ரி (Every) என்கிற பெயரில் ஏற்கனவே ஐசிஇ (ICE) வாகனத்தை சுஸுகி உலக சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஜப்பான் மற்றும் பாகிஸ்தான் போன்ற உலக நாடுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Image Source: bestcarweb இந்த நிலையிலேயே இதன் மின்சார வெர்ஷனையும் சுஸுகி மற்றும் டொயோட்டா கூட்டணி இந்த உலகத்திற்காக தயார் செய்து, அதை வெளியீடு செய்திருக்கின்றது. கான்செப்ட் (Concept) மாடலாகவே தற்போது இந்த வேனை அவர்கள் தயார் செய்திருக்கின்றனர். ஆனால், வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் மாடலை பார்க்கையில் அது உற்பத்திக்கு தயார் நிலையில் இருப்பதைப் போல தெரிகின்றது.
ஆகையால், சீக்கிரமே இந்த மின்சாரத்தில் இயங்கும் எவ்ரி உலக சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின்படி, இந்த மின்சார வேன் இந்த ஆண்டு முடிவடைவதற்குள்ளாக விற்பனைக்கு வந்துவிடும் என தெரிகின்றது. இன்னும் சில தகவல்கள் இந்த வேன் நடப்பாண்டின் கோடைக் காலம் முடிவடைவதற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்றும் தெரிவிக்கின்றன.
முதலில் ஜப்பானிலேயே இ-எவ்ரி விற்பனைக்கு வர இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதற்கு பின்னரே பாகிஸ்தான் போன்ற பிற நாடுகளில் அது விற்பனைக்குக் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. லோடு ஏற்றி செல்லும் வாகனம் மற்றும் கால் டாக்சி வாகனம் ஆகிய பிரிவிற்கான வாகனமாகவே இது முதலில் விற்பனைக்கு வர உள்ளது.
இந்தியாவில் இந்த வாகனம் விற்பனைக்கு வருவதற்கான எந்தவொரு சாத்தியக் கூறும் இதுவரை உருவாகவில்லை. ஒருவேளை இது விற்பனைக்கு வரும் எனில் மாருதி சுஸுகி ஈகோ-விற்கு மாற்றாக இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இதேபோல், சுஸுகி பிராண்டின்கீழ் மட்டுமல்ல இந்த வாகனம் ரீ-பேட்ஜ் செய்யப்பட்டு டொயோட்டா பிராண்டீன் கீழும் உலக சந்தையில் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது.
ஏற்கனவே எவ்ரி ஐசிஇ வெர்ஷனை டொயோட்டா ரீ-பேட்ஜ் செய்து பிக்சிஸ் மற்றும் டைஹட்சு ஹைஜெட் ஆகிய பெயர்களில் உலக சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் அடிப்படையிலேயே தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் இ-எவ்ரியும், இந்த பிராண்டின்கீழ் ரீ-பேட்ஜ் செய்யப்பட்டு புதிய பெயரில் விற்பனைக்கு வரும் என உறுதியான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுவும் இந்த ஆண்டு முடிவடைவதற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்றே கூறப்படுகின்றது.
இ-எவ்ரி பற்றிய முக்கிய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் அதுபற்றிய முக்கிய விபரங்கள் வெளியாகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி இந்த வாகனம் ஓர் முழு சார்ஜில் 200 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கும் என்பது மட்டும் தெரிய வந்திருக்கின்றது. எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்த வரை 64 பிஎஸ் திறன் கொண்டதே இதில் பயன்படுத்தப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக கமர்சியல் வாகன பிரிவை மையப்படுத்தி மின்சார வாகனங்கள் அதிக அளவில் விற்பனைக்குக் களமிறங்கிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், எதிர்காலத்தில் சுஸுகி இந்த வாகனத்தை மாருதி சுஸுகி பிராண்டின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வரும் என நாம் எதிர்பார்க்கலாம். மேலும், இது பார்க்க வேன் மாதிரி இருந்தாலும், அதை குடும்பங்களுக்கான காரை போலவும் நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








