மிடில்-கிளாஸ் மக்கள் யாராக இருந்தாலும் மயங்கிடுவாங்க... க்யூட்டான கார் என்றால் இப்படி இருக்கனும்!!

ஜப்பானை சேர்ந்த சுஸுகி (Suzuki) நிறுவனத்தில் இருந்து தாய்லாந்து (Thailand)-இல் செலேரியோ மிலானோ எடிசன் (Celerio Miano Edition) காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது. 68 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் இந்த புதிய செலேரியோ கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. புதிய செலேரியோ மிலானோ எடிசனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியில் இருந்து மேம்படுத்தப்பட்ட செலேரியோ கார் கடந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் புதிய செலேரியோ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இது செலேரியோ காரின் முந்தைய விலையை காட்டிலும் சற்று அதிகமாகும்.

suzuki celerio milano edition showcased

இருப்பினும், தாய்லாந்தில் பழைய செலேரியோ கார்களும் சிறப்பாக விற்பனையாகுகின்றன. இந்த நிலையில் தான், செலேரியோ மிலானோ எடிசன் என்கிற பெயரில் புதிய ஸ்பெஷல் எடிசன் (Special Edition) கார் தாய்லாந்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ட்யூயல்-டோன் (Dual-tone) நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய செலேரியோ மிலானோ எடிசன் வழக்கமான செலேரியோ காரில் இருந்து நிறைய விஷயங்களில் மாறுப்பட்டு காணப்படுகிறது.

இந்தியாவில் மாருதி சுஸுகி செலேரியோ கார் கடந்த 2021 நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு சந்தைகளில் இப்போதும் பழைய செலேரியோ கார் தான் விற்பனையில் உள்ளது. இதனால், இந்தியாவில் விற்பனையில் உள்ள செலேரியோ காருக்கும், தாய்லாந்து செலேரியோ காருக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இந்த நிலையில், தாய்லாந்து நாட்டில் வெளியீடு செய்யப்பட்டுள்ள செலேரியோ மிலானோ எடிசன் காரில் ஏகப்பட்ட ஆக்ஸஸரீகள் வழங்கப்பட்டுள்ளன.

suzuki celerio milano edition showcased

குறிப்பாக, காரின் மேற்கூரையில் வழங்கப்பட்டுள்ள ரூஃப் கேரியர் (Roof Carrier) பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. இந்த செலேரியோ ஸ்பெஷல் எடிசன் காரின் அடிப்படை நிறம் வெள்ளை ஆகும். அதற்கு மேல் டீல் மற்றும் கோல்டு நிறங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் மேல்பகுதி வெள்ளை நிறத்திலும், கீழ்பகுதி டீல் எனப்படும் இளம் நீல நிறத்திலும் உள்ளது.

இதனை பிரிக்கும் வகையில் கருப்பு நிறத்தில் ஒரு கோடு ஹெட்லைட்டில் இருந்து டெயில்லைட் வரையில் செல்வதை காணலாம். காரின் அலாய் சக்கரங்கள் கூட டீல் நிறத்தில் காட்சியளிக்கின்றன. காரின் அடி கீழ்பகுதியில் கோல்டன் நிறம் பிரகாசிக்கிறது. மேலும், பின்பக்கத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகளின் மூடிகள் மற்றும் டோர் ஹேண்டில்கள் உள்ளிட்டவையும் இதே கோல்டன் நிறத்தில் உள்ளன.

suzuki celerio milano edition showcased

ரூஃப் கேரியர் கூட வெள்ளை & கோல்டு என இரு நிறங்களில் காட்சியளிக்கிறது. தாய்லாந்தில் செலேரியோ காரில் கே10பி 1.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 68 பிஎஸ் மற்றும் 90 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த சுஸுகி செலேரியோ மிலானோ எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா என்றால், வாய்ப்புகள் குறைவுதான். ஏனெனில், இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது நியூ-ஜென்ரேஷன் செலேரியோ கார் ஆகும். ஒருவேளை, இந்த மிலானோ எடிசனை போன்று ஸ்பெஷல் எடிசன் இங்குள்ள செலேரியோவில் அறிமுகம் செய்யப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 1, 2025, 13:41 [IST]
English summary
Suzuki celerio milano edition showcased at thailand international motor expo
மேலும்... #suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X