இந்தியாவுல யாருமே மதிக்கல! ஜப்பான்ல இந்த காருக்கு செம டிமாண்ட்! புக்கிங் மீண்டும் துவங்கியது!

மாருதி நிறுவனம் ஜிம்னி என்ற 5 டோர் ஆஃப்ரோடு எஸ்யூவி காரை விற்பனை செய்து வருகிறது.இந்தியாவில் இந்த காருக்கு போதுமான வரவேற்பு இல்லை. பெரிய அளவில் விற்பனையாகவில்லை. ஆனால் ஜப்பானில் கதையே வேறு. இந்த கார் ஜப்பானில் நோமேட் என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது.இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது இந்த கார் நல்ல விற்பனையையும் பெற்று வருகிறது. இந்த காருக்கான புக்கிங் தற்காலிகமாக ஜப்பானில் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜப்பானில் இந்த நோமேட் கார் அறிமுகமான 4 நாட்களிலேயே 50,000 கார்கள் புக்காவிட்டது. எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக எண்ணிக்கையில் இந்த காருக்கு புக்கிங் குவிந்ததால் இந்த காருக்கான காத்திருப்பு காலம் இருந்தது. இதுவரை புக் செய்தவர்களுக்கே கார் வழங்க காலதாமதமாகும் என கணிக்கப்பட்டது. கார் புக் செய்தவர்களே 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய தேவையிருந்தது.இதனால் புக்கிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Suzuki Jimny Nomade Bookings Reopen

இந்த காருக்கான தயாரிப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது விரைவாக கார்களை டெலிவரி செய்யலாம் என்பதால் மீண்டும் ஜப்பானில் இந்த காருக்கான புக்கிங்கை அந்நிறுவனம் துவங்கியுள்ளது. மாருதி நிறுவனம் இதுவரை 1 லட்ம் நோமேட் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஜப்பான் மட்டும் அல்லாமல் ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ,சிலி, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்த கார் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் சிறப்பாக ஏற்றுமதியான நிலையில் தற்போது அதற்கு அடுத்ததாக இந்த ஜிம்னி 5 டோர் கார் ஏறு்றமதி இருகு்க்கிறது. இந்த காரின் கட்டமைப்பு லேடர் ஃபிரேம், 4 வீல் டிரைவ், லோ ரேஞ்ச் டிரான்ஃபர் கேஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் 3 டோர் வெர்ஷன் ஏற்கனவே சர்வதேச அளவில் விற்பனவையாகி வருகிறது. இந்த காரின் வீல் பேஸை பெரிதாக்கி 5 டோர் வெர்ஷனாக உருவாக்கியுள்ளனர்.

Suzuki Jimny Nomade Bookings Reopen

இந்த காரின் வடிவமைப்பு பாக்ஸி வடிவமைப்பில் தான் உள்ளது. இதன் கிரில் பகுதி 5 ஸ்லாட் கிரில் உடன் கன் மெட்டல் ஃபினிஷ் செய்யப்பட்டள்ளது. அதை சுற்றி குரோம் பிளேட் வழங்கப்பட்டள்ளது. இந்த காரின் 6 வெளிப்புற கட்டமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் சிசிலிங் ரெட் மெட்டாலிக், செலஸ்டியல் ப்ளூ மெட்டாலிக், ஜிம்னி பேலட் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் எஃப் ஆர் லே அவுட் ஆகிய வசதிகள் உள்ளது.

இந்த கார் 3 லிங்க் ரிஜ்ஜிட் ஆக்ஸில் சஸ்பென்சன் செட்டப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஃப்ரோடு பயன்பாட்டில் சிறப்பாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது போக பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பாக உள்ளது. முக்கியமாக வேகமாக செல்லும் போது ஸ்டெபிலிட்டி, ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களில் டுயல் கேமரா பிரேக் சப்போர்ட் சிஸ்டம், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜிம்னி 5 டோர் காருக்கு இந்தியாவில் பெரியஅளவில் வரவேற்பு இல்லை என்றாலும் ஜப்பானில் வரவேற்பு கிடைக்கிறது.இந்தியாவில் இதன் 3 டோர் வெர்ஷன் சற்று ரக்கட் லுக்கில் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகமானால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 28, 2025, 14:25 [IST]
English summary
Suzuki jimny nomade bookings reopen waiting period 4 years
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X