திடீரென லோகோவை மாற்றிய சுஸூகி! இனி உலகம் ஃபுல்லா இது தான் இருக்கும்!

சுஸூகி நிறுவனம் சர்வதேச அளவில் தனது லோகோவை மாற்றியமைத்துள்ளது. இந்நிறுவனம்இந்நிறுவனம் 22 ஆண்டுகளுக்கு பிறகு இதை மாற்றியமைத்துள்ளது. இது தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இனி தனது வாகனங்களில் புதிய லோகோவையே பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சுஸூகி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் மாருதியுடன் இணைந்து வாகனங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தான் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமாக மாறியுள்ளது. இந்நிலையில் சுஸூகி நிறுவனம் சர்வதேச அளவில் தனது லோகோவை மாற்றியுள்ளது.

Suzuki logo Change

சுஸூகி நிறுவனம் சர்வதேச அளவில் பல நாடுகளில் வாகனங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றப்பட்டலோகோவையே பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு தனது லோகோவை மாற்றியள்ளது. இந்த லோகோவுடன் ஆங்கிலத்தில் "By Your Side" என்ற பெயரையும் குறிப்பிட்டுள்ளது. இது ஆட்டோமொபைல் துறையில் வரும் மாற்றங்களை அந்நிறுவனம் ஏற்றுக்கொள்வதை பிரிதிபலிக்கிறது.

இந்த மறுவடிவமைப்பு அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் மீதான கவனம் என்ற நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் நல்ல மாற்றங்கள் வரும் எனவும் அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. வாடிக்கையாளர்கள் மொபிலிட்டி மாற்றத்தில் பல யுக்திகளை மாற்றி வருகின்றனர். அதற்கு இந்த புதிய லோகோ மாற்றத்தின் மூலம் வாடிக்கையாளர் தேவைகள பூர்த்தி செய்வதாக தெரிவித்துள்ளது.

இந்த புதிய லோகோவில் S என்ற வடிவமைப்பு அப்படியே தான் இருக்கிறது. இதன் ஐடென்டிட்டி அப்படியே இருக்கிறது. ஆனால் இதற்கு முன்னர் நடுபடுகுதியில் சற்று பெரியதாக இருந்தது. மாற்றப்பட்டு ஃபிளாட்டாக வடிடவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய டிஜிட்டல் தொழிற்நுட்பத்திற்கு ஏற்றவாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் முக்கியமாற்றம் என்றால் இதற்கு முன்னர் குரோம் பிளேட் மூலம் இது வடிவமைக்கப்பட்டது. இனி இது அதிக பிரைட்டான சில்வர் பெயிண்ட் கொண்டு ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய லோகோ ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2025ல் முதன் முறையாக காட்சிப்படுத்தப்ட்டுள்ளது. இது தனது கான்செப்ட் கார்களில் காட்சிப்படுத்தப்ட்டுள்ளது. இது மெல்ல மெல்ல தயாரிப்பு மாடல்களுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த லோகோவின் அடிப்படை மாறவில்லை. டிசைனில் மட்டுமே அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது உள்ள கார்களில் ஃபிட் செய்ய பெரிய பிரச்சனை இருக்காது. அதே நேரம் பின்பகுதியிலும் பிரச்சனை இருக்காது. இதனால் புதிய கார்களில் இந்த புதிய லோகோ இடம் பெற அதிக நேரம் தேவைப்படாது.

இந்தியாவில் மாருதி விக்டோரிஸ் காரில் தான் இந்த புதிய பேட்ஜ் முதன் முதலில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து கிராண்ட் விட்டாரா, எர்டிகா, ஃபிராங்க்ஸ் ஆகிய கார்களிலும் விரைவில் இந்த லோகோ மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுஸூகி நிறுவனத்திற்கு மிகப்பெரிய மார்கெட் இருக்கிறது. இந்நிலையில் இதன் லோகோ மாற்றம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பெரிய அளவில் மாற்றம் இல்லாதது. இது குறித்து எந்த விதமான கருத்தையும் உருவாக்கவில்லை. பலர் இந்த புதிய லோகோவை காரில் பொருத்தியிருப்பதை பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 24, 2025, 18:05 [IST]
English summary
Suzuki logo change new brand identity revealed globally
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+