48V மைல்டு ஹைபிரிட் உடன் வருகிறது புதிய ஸ்விஃப்ட்.. சங்கதியை கேட்டு இப்பவே எல்லாரும் ஷோரூம் கிளம்பியிருப்பாங்க

இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல்களில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift)-ம் ஒன்றாகும். இந்த கார் மாடலிலேயே ஸ்விஃப்ட் ஸ்போர்ட் இசட்சி33எஸ் ஃபைனல் எடிசன் (Swift Sport ZC33S Final Edition) எனும் பதிப்பை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது சுஸுகி (Suzuki) நிறுவனம். 3 ஆம் தலைமுறை ஸ்விஃப்ட் (3rd Gen Swift) கார் மாடலை தழுவி உருவாக்கப்பட்டதே இந்த பதிப்பு ஆகும். இது விரைவிலேயே விற்பனைக்கு வந்துவிடும் என கூறப்படுகின்றது. மார்ச் மாதத்தில் இது விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இதேபோல், நடப்பாண்டு நவம்பர் மாதம் வரை மட்டுமே அது விற்பனையில் இருக்குமாம். இந்த நிலையிலேயே 3 ஆம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை தழுவி உருவாக்கப்பட்ட ஸ்விஃப்ட் ஸ்போர்ட் இசட்சி33எஸ் ஃபைனல் விற்பனைக்கு வரும் முன்னரே, 4 ஆம் தலைமுறை ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரின் வருகை பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன.

4th-gen swift sport to get mild-hybrid

அதன் வருகை 2026 ஆம் ஆண்டிலேயே அரங்கேற இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த 4ஆம் தலைமுறை ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரை அதிகம் மைலேஜ் தர வேண்டும் என்பதற்காக 48 வோல்ட் திறன் கொண்ட மைல்டு ஹைபிரிட் அம்சத்தை வழங்கி இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.

இது ஸ்விஃப்ட் கார் காதலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஆகையால், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் இசட்33எஸ் ஃபைனல் எடிசனுக்கு பதிலாக, பலர் 4 ஆம் தலைமுறை ஸ்விஃப்ட் ஸ்போர்ட் எடிசனுக்காக காத்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த அளவிற்கு சிறப்பானதாக இது தயார் செய்யப்பட்டு வருகின்றது.

4th-gen swift sport interior

4 ஆம் தலைமுறை ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் அதிக ஆற்றலை வெளியேற்றக் கூடியதாக மட்டுமல்ல அதிக மைலேஜை தரக் கூடியதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 1.4 லிட்டர் டர்போசார்ஜட் இன்லைன் 4 பெட்ரோல் மோட்டாரில் லேசான மாற்றங்களை மேற்கொள்ள இருக்கின்றனர்.

இந்த மோட்டாரின் இப்போதைய திறன் வெளிப்பாடு 140 பிஎஸ் மற்றும் 130 என்எம் டார்க்காக உள்ளது. இந்த நிலையிலேயே மைல்டு ஹைபிரிட் அம்சம் சேர்க்கப்பட இருப்பதால் இது இன்னும் அதிக ஆற்றலை வெளியேற்றக் கூடியதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 165 பிஎஸ் மற்றும் 299 என்எம் டார்க் வரை இது வெளியேற்றலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

4th-gen swift sport rear

மைலேஜ் தருவதிலும் கணிசமான மாற்றம் இதில் எதிர்பார்க்கப்படுகின்றது. 48 வோல்ட் திறன் கொண்ட மைல்டு ஹைபிரிட் அம்சம் சேர்க்கப்பட இருப்பதால் அதன் மைலேஜ் திறனும் சற்றே அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 25 கிமீ வரையில் அது மைலேஜ் தரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இன்னும் அதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதேவேளையில், இந்த கார் முதலில் ஜப்பானிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இதற்கு பின்னரே உலக சந்தையில் அந்த காரை சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 2026 ஆம் ஆண்டின் இறுதி அல்லது அதற்கு பின்னர் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்விஃப்ட் காருக்கான மிக சிறந்த சந்தையாக இந்தியா இருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இது விரைவிலேயே விற்பனைக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 25, 2025, 11:46 [IST]
English summary
Suzuki s 4th gen swift sport to feature mild hybrid in 2026 more details here
மேலும்... #suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X