டாடா மார்க்கெட்டை அடியோடு சரிக்க போகும் விலை குறைவான கார்! தரமட்டத்துக்கு இறங்கி அடிக்க போகும் மாருதி!

ஜப்பான் மொபிலிட்டி ஷோ (Japan Mobility Show) வாகன திருவிழா, வரும் அக்டோபர் 29ம் தேதி தொடங்குகிறது. இதில், சுஸுகி (Suzuki) நிறுவனம் ஏராளமான வாகனங்களை காட்சிக்கு வைக்கவுள்ளது. அப்படி சுஸுகி நிறுவனத்தால், ஜப்பான் மொபிலிட்டி ஷோ வாகன திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்படும் கார்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

இதில், சுஸுகி விஷன் இ-ஸ்கை எலெக்ட்ரிக் (Suzuki Vision e-Sky Electric) மிகவும் முக்கியமானது ஆகும். இது ஒரு கான்செப்ட் கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு, கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suzuki Vision e-Sky

சுஸுகி விஷன் இ-ஸ்கை எலெக்ட்ரிக் கான்செப்ட் காரின் டிசைன், ஜப்பான் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட சுஸுகி வேகன் ஆர் (Suzuki Wagon R) காரின் டிசைனை நமக்கு நினைவுபடுத்துகிறது. இருப்பினும் பல்வேறு தனித்துவமான டிசைன் அம்சங்களையும் இது கொண்டுள்ளது.

அதாவது இதன் முன் பக்க டிசைன் முற்றிலும் புதிதான ஒன்றாகும். அத்துடன் C வடிவ எல்இடி பகல் நேர விளக்குகளையும் இது கொண்டுள்ளது. பக்கவாட்டு டிசைனை பொறுத்தவரையில், வீல் ஆர்ச்சுகள், புதிய சக்கரங்கள் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளன. பின் பகுதி டிசைனை பொறுத்தவரையில், C வடிவ டெயில்லைட்கள், அகலமான விண்டுஸ்க்ரீன் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமானவை ஆகும்.

Suzuki Vision e-Sky Interior

அதே நேரத்தில் சுஸுகி விஷன் இ-ஸ்கை எலெக்ட்ரிக் கான்செப்ட் காரின் நீளம் 3,395 மிமீ ஆகவும், அகலம் 1,475 மிமீ ஆகவும், உயரம் 1,625 மிமீ ஆகவும் உள்ளது. ஜப்பானில் விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட வேகன் ஆர் காரும் கிட்டத்தட்ட இதே அளவில்தான் இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், தலா 12 இன்ச் அளவில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற வசதிகளையும் சுஸுகி விஷன் இ-ஸ்கை எலெக்ட்ரிக் கான்செப்ட் கார், தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்படும்போது கொண்டிருக்கலாம்.

ஆனால் சுஸுகி விஷன் இ-ஸ்கை எலெக்ட்ரிக் கான்செப்ட் காரின் பேட்டரி திறன் போன்ற தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 270 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக இருக்கும் என சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சுஸுகி விஷன் இ-ஸ்கை எலெக்ட்ரிக் கான்செப்ட் கார், தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு, ஜப்பானில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். ஆனால் இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா? என்பது சந்தேகம்தான். ஆனால் இது இல்லை என்றாலும் கூட, மற்றொரு சப்-4 மீட்டர் எலெக்ட்ரிக் காரை, மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

அது இடபிள்யூஎக்ஸ் (eWX) எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். இதற்கு இந்தியாவில் ஏற்கனவே காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு இது போட்டியாக இருக்கும்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 7 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த புதிய எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 9, 2025, 14:21 [IST]
English summary
Suzuki vision e sky concept unveiled check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+