தரமட்ட விலையில் சுஸூகி இவி மைக்ரோ கார்! சிங்கிள் சார்ஜ்ல 170 கி.மீ போகலாம்!

சுஸூகி நிறுவனம் முதன் முறையாக தனது எலெக்ட்ரிக் மைக்ரோ காரை ஜப்பானில் நடந்துவரும் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தியள்ளது.இந்த குறைந்த விலையில் சிட்டி பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இந்த காருக்கு இ-ஸ்கை என பெயர் வைத்துள்ளது. இது குறித்தவிரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜப்பானில் தற்போது ஆட்டோமொபிலட்டி ஷோ 2025 நடந்து வருகிறது. இந்த கண்காட்சியில் அந்நாட்டில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை எல்லாம் காட்சிப்படுத்தி வருகின்றனர். சுஸூகி நிறுவனம் ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஜப்பானில் தனது புதிய மைக்ரோ எலெக்ட்ரிக் காரை காட்சிப்படுத்தியுள்ளது.

Suzuki Vision E-Sky

ஜப்பானில் மைக்ரோ எலெக்ட்ரிக் காரை கை கார் என அழைக்கிறார்கள். இது சுஸூகி நிறுவனத்திற்கு புதிய பரிணாமத்தை வழங்குகிறது. இந்நிறுவனம் சிறிய மற்றும் குறைந்த விலை கார்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனமாக இருந்தாலும் இந்த செக்மெண்டில் இதுவரை அந்நிறுவனத்திடம் எலெக்ட்ரிக் கார்கள் இல்லை.

இந்நிலையில் சிட்டி பயன்பாட்டிற்கு ஏற்ற காராக விஷன் இ-ஸ்கை என்ற கான்செப்ட் காரை உருவாக்கியுள்ளது. இ்நதகார் சிறிதாகவும் அதே நேரம் சிறப்பான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 2026ம்ஆண்டு இறுதிக்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் சிறியதாக இருந்தாலும் மார்டன் மற்றும் பிரிமியம் லுக்கை கொண்டதாக இருக்கிறது.

Suzuki Vision E-Sky

இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 3395 மிமீ நீளம், 1475 மிமீ அகலம், 1625 மிமீ உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பல்வேறு அம்சங்கள் இருக்கிறது. முக்கியமாக பிக்ஸல் ஸ்டைல் ஹெட்லைட்டுகள், சி வடிவ எல்இடி டிஆர்எல், ஸ்மூத்தான பாடி ஃபினிஷ், ரியாக்டபிள் டோர் ஹேண்டில், ஸ்லோப்பிங் ரூஃப்லைன், டுயல் டோன் ஃபினிஷ், மினிமலான கேபின், வயர்லெஸ் சார்ஜிங் பேட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ட்ரே வடிவை டேஷ்போர்டுகள், அதிக ஸ்டோரேஜ் வசதி உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

இந்த காரின் ஸ்டியரிங் வீல் சதுர வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இது வசதியாகவும், சிட்டிபயனத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும். சொகுசு கார்களில் இருப்பது போல அல்லாமல் இதில் வேறு விதமான ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இந்த காரில் உள்ள பேட்டரி அளவுகள் குறித்த விபரங்களை வெளியிடவில்லை. ஆனால் இந்த கார் 270 கி.மீ சிங்கிள் சார்ஜில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suzuki Vision E-Sky

இதனால் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற காராக இந்தகார் இருக்கிறது. குறைவான செலவு, அதிக திரன், குறைவான பராமரிப்பு செலவு இதனால் சராசரி மனிதால் இந்த காரைவாங்க முடியும் நிலையில் இந்த கார்வடிவமைக்கப்பட்டள்ளது. சிறிய ரக கார்கள் ஜப்பானில் மிக பிரபலமான கார்களாக உள்ளன. இதில் குறைந்தவிலை வந்தால் நிச்சயம் விலை அதிகமாக இருக்கும். இந்தியாவிலும் இந்த கார் வருவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸூகி நிறுவனத்தின் இந்த கை கார்கள் ஜப்பானில் மிக பிரபலமான கார்களாக உள்ளன. இந்த காரின் விலை குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.விலை விபரம் வெளியானால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் மார்கெட்டில் இந்த கார் வெற்றி பெரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 29, 2025, 18:45 [IST]
English summary
Suzuki vision e sky japan mobility show 2025 electric concept
மேலும்... #suzuki #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X