ஊரில் ஒருத்தரிடம் ஆவது நிச்சயம் இருக்கும்... கார் சைஸில் சின்னதா இருந்தாலும் எல்லாரும் வாங்குறாங்க!

சுஸுகி (Suzuki), ஜப்பானை சேர்ந்த முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவில் மாருதி (Maruti) நிறுவனத்துடன் இணைந்து சுஸுகி செயல்பட்டு வருவதை பற்றி சொல்ல வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், மாருதி நிறுவனத்திற்கும், சுஸுகி நிறுவனத்திற்கும் இடையேயான கூட்டணி ஆனது பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது.

ஜப்பானில் வரவேற்பை பெற்ற பல கார்கள் இந்தியாவில் மாருதி சுஸுகியில் அறிமுகம் செய்யப்பட்டு பெரிய வெற்றியை பெற்றுள்ளன. அவ்வாறு ஜப்பானில் சுஸுகி நிறுவனம் உருவாக்கி, இந்தியாவில் பலத்த வரவேற்பை பெற்ற கார்களுள் ஒன்று, வேகன்ஆர் (WagonR) ஆகும். உயரம் அதிகம் கொண்ட ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரான வேகன்ஆர் இந்தியாவில் கடந்த பல வருடங்களாகவே மக்கள் அதிகம் பேர் வாங்கும் கார்களுள் ஒன்றாக உள்ளது.

suzuki wagonr car sales

உயரமான காராக இருப்பதாலேயே காரின் மற்ற அளவுகள் சிறியதாக இருப்பினும், காருக்குள் போதுமான அளவிற்கு இடவசதி கிடைக்கிறது. இந்த ஒரு காரணத்தினாலேயே குறைந்த விலையில், சவுகரியமான இடவசதி உடன் காரை எதிர்பார்ப்பவர்களின் முதன்மையான சாய்ஸ்களுள் ஒன்றாக மாருதி சுஸுகி வேகன்ஆர் உள்ளது. இது இந்தியாவில் மட்டுமில்லை, உலகின் பல நாடுகளில் இந்த நிலை தான் தொடர்கிறது.

இதன் மூலமாகவே, உலகளவில் வேகன்ஆர் கார்களின் விற்பனையில் 1 கோடி என்கிற இமாலய எண்ணிக்கையை சுஸுகி நிறுவனம் கடந்துள்ளது. இதில், நாம் எதிர்பார்ப்பதை போலவே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸுகி வேகன்ஆர் காரின் பங்களிப்பு தான் அதிகமாக உள்ளது. இந்தியவில் மட்டும் இதுவரையில் சுமார் 34 லட்சத்து 14 ஆயிரத்து 176 வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

suzuki wagonr car sales

இது, வேகன்ஆர் காரின் உலகளாவிய 1 கோடி எண்ணிக்கையில் 34.14% ஆகும். அதாவது, உலகில் சுஸுகி வேகன்ஆர் காரை வாங்கும் 3இல் ஒருவர் இந்தியர் ஆவார். அந்த அளவிற்கு நம் இந்தியர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் வேகன்ஆர் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அந்த வகையில், மேட்-இன் இந்தியா வேகன்ஆர் கார்கள் இந்தியாவுக்கு அருகில் உள்ள பூடான், நேபாளம் மற்றும் இலங்கை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 1 கோடி என்கிற இமாலய விற்பனை எண்ணிக்கையை எட்டியுள்ள வேகன்ஆரின் இந்த பயணம் 1993ஆம் ஆண்டில் துவங்கியது. ஜப்பானில் முதல்முறையாக 1993 செப்டம்பர் மாதத்தில் சுஸுகி வேகன்ஆர் அறிமுகம் செய்யப்பட்டது.

suzuki wagonr car sales

அதனை தொடர்ந்து 1998ஆம் ஆண்டில் 2ஆம் தலைமுறை வேகன்ஆர் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் வேகன்ஆர் கார்களை உற்பத்தி செய்யும் பணிகளை 1999 டிசம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி துவங்கியது. அதனை தொடர்ந்து 2000ஆம் ஆண்டில் இந்தியாவில் வேகன்ஆர் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் அதிகம் பேர் வாங்கிய கார்கள் வரிசையில் மாருதி சுஸுகி ஆல்டோவிற்கு அடுத்து 2வது இடத்தை வேகன்ஆர் பிடித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 15 ஆயிரம் வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த அளவிற்கு வேகன்ஆர் காரின் மைலேஜின் மீதும், அதன் நீடித்து உழைக்கும் தன்மையின் மீதும் இந்தியர்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் தான் இந்த நிலைமை என்று பார்த்தால், உலகின் பல நாடுகளிலும் வேகன்ஆர் காருக்கு சிறப்பான வரவேற்பு உள்ளதை 1 கோடி என்கிற இமாலய விற்பனை எண்ணிக்கை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, August 11, 2025, 5:00 [IST]
English summary
Suzuki wagonr car sales number crossed 1 crore all over world
மேலும்... #suzuki #wagon r car #car sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X