ஸ்விஃப்ட் இன்ஜின், விக்டோரிஸ் ஸ்டியரிங்ன்னு எல்லா காரையும் கலந்து உருவாக்கிய காரை வெளியிட்ட மாருதி!

சுஸூகி நிறுவனம் ஜப்பானில் நடந்து வரும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் தனது XBEE காம்பேக்ட் கிராஸ் ஓவர் மாடல் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்டுள்ளது. இந்த கார் கடந்த 2017ம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் தற்போது அறிமுகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சுஸூகி நிறுவனம் XBEE என்ற காம்பேக்ட் கிராஸ்ஒவர் காரை ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2025ல் அவெளியிட்டுள்ளது. இந்த காரை அந்நாட்டில் கிராஸ்பி என அழைக்கிறார்கள். இந்த கார் கடந்த 2017ம் ஆண்டு அந்நாட்டில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

Suzuki XBEE

இந்த XBEE காரில் சுஸூகி நிறுவனம் தனது இசட் 12இ பெட்ரோல் இன்ஜினை பொருத்தியுள்ளது. இதே இன்ஜின் தான் பழைய ஸ்விஃப்ட் காரில் அந்நிறவனம் பொரத்தியுள்ளது. இந்த காரின் வடிவமைப்பு பாக்ஸி ஸ்டைலில் உள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவில் விற்பனையாகும் எஸ்-பிரெஸ்ஸோ காரின் லுக்கில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீளம் 200 மிமீ அதிகமாக உள்ளது.

இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டில் இந்த காரில் வட்ட வடிவ ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. கிரில் பகுதி சில்வர் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் புதிய டுயல் டோன் பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது. இது போக புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இது சற்று பிரிமியம் லுக்கில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரன் உட்புறம் புதிய ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது.

Suzuki XBEE

இது சமீபத்தில் இந்தியாவில் வெளியான விக்டோரிஸ் காரின் ஸ்டிரிங் வீல் போல வழங்கப்பட்டுள்ளது. இது போக புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதன் சென்டர் கன்சோல் பகுதியில் ஸ்விட்ச் கியர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதே போன்ற டிசைன் தற்போது இந்தியாவில் விற்பனையாகும் மாருதி கார்களில் உள்ளதை போல இருக்கிறது. இதன் கியர் லிவர் ஃப்ளோட்டிங் வடிவமைப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் ஜிம்னி காரில் உள்ளதை போல இருக்கிறது.

இந்த XBEE காரில் அதிக இட வசதி வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேபின் முழுவதும் ஸ்மார்ட்டான ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. இந்த காரை சுஸூகி நிறுவனம் தனது ஹார்ட்டிரக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்குகிறது. இந்த கார் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனிற்கு முன்பு 1.0 லி டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது தற்போதைய அப்டேட்டில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இசட்12இ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சிவிடி கியர் பாக்ஸ் உடன் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க வீல் டிரைவ் ஆப்ஷனவில் இது வழங்கப்படுகிறது.

Suzuki XBEE

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த XBEE கார் ஜப்பானில் மட்டுமே தனித்துவமாக விற்பனையாகிறது. சுஸூகி நிறுவனத்திற்கு இந்த காரை இந்தியாவிற்கு கொண்டு வரும் திட்டம் இல்லை. அப்படி இந்த கார் இந்தியா வந்தாலும் டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் முதல் தலைமுறை காரை தேடுபவர்களுக்கு இந்த கார் ஒரு நல்ல ஆப்ஷன் தான்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 30, 2025, 11:20 [IST]
English summary
Suzuki xbee japan mobility show 2025 compact suv showcase
மேலும்... #suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X