குறைந்த விலையில் குட்டி யானை ஆட்டோ! லாபம் எக்கசக்கமா கொட்டப்போகுது!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் தனது ஏஸ் கோல்டு + என்ற லோடு ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனம் தமிழகத்தில் "குட்டியானை" என பிரபலான வாகனமாக இரகு்கிறது. இதில் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சரக்கு வாகனங்களை பயன்படுத்தும் தொழிலதிபர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சரக்கு வாகனங்களை தயாரித்து விற்பவனை செய்யும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது டீசலில் இயங்கும் அதிக மைலேஜ் தரும் ஏஸ் கோல்டு + என்ற வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனம் தமிழகத்தில் "குட்டியானை" என பிரபலமாக அழைக்கப்படுகிறது.

Tata Ace Gold

இந்த புதிய வேரியன்டில் Lean NOx Trap(LNT) என்ற புதிய தொழிற்நுட்பம் பொருத்தப்ப்டடுள்ளது. இது Diesel Exhaust Fluid தேவையை நீக்குகிறது. இதன் காரணமாக குறைந்த விலை சிறப்பான ஃபெர்பார்மென்ஸ் தரும் வாகனமாகவும், அதே நேரம் குறைவான பராமரிப்பு மற்றும், செயல்பாட்டு செலவை கொண்ட வாகனமாக இது இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சின்ன தொழிலதிபர்களுக்கு இந்த வாகனம் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என கூறப்படுகிறது. இந்த வாகனம் வெறும் ரூ5.52 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த வாகனத்தில் டர்போ சார்ஜ்டு டெக்கர் இன்ஜின் பொருத்தப்ப்டடுள்ளது. இது 22 எச்பி பவரையும், 55 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இரகு்கிறது. இது 900 கிலோ வரை எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

இந்த வாகனத்தில் சரக்கு வைக்கும் பகுதி பல்வேறு விதமான வடிவமைப்புகளில் செய்ய முடியும். உதாரமாக முழுவதுமாக மூடப்பட்ட வாகனம், ஹார்டு டாப், சாஃட் டாப், முழு ஓப்பன் ஆகிய வகைகளில் இதை பயன்படுத்த முடியும். இதனால் சரக்கு ஏற்றி செல்பவர்கள்,சாலையோரமாக கடை வைப்பவர்கள், வீதிவீதியாக சென்ற வியாபாரம் செய்பவர்கள், அதிக பாரம் கொண்ட சரக்குகளை கையாளபவர்களுக்கு இது வசதியாக இருக்கும்.

கடந்த 20 ஆண்டுகளாக லாஸ்ட் மைல் டெலிவரியில் இந்த வாகனம் சிறப்பாக செயல்படும் வாகனமாக இருக்கிறது. இந்த வாகனத்தின் விற்பனையும் சிறப்பாக இருக்கிறது. இந்நிலையில் இந்த டாடா ஏஸ் கோல்டு + வேரியன்ட் விற்பவனை அதற்கு ஏற்றார் போல அதிமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகதிறது. குறைவான விலை சிறப்பான பெர்பார்மென்ஸ், அதிக மைலேஜ், குறைந்த பராமரிப்பு செலவு காரணமாக இதை வாங்கி தொழில் நடத்துபவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

மேலும் இந்த வாகனத்திற்கு டாடா நிறுவனம் சம்ப்பூர்வா சேவா 2.0, 24X7 ரோடு சைடு அசிஸ்டென்ஸ், 2500க்கும் மேற்பட்ட சர்வீஸ் சென்டர்கள், ஆகிய வசதிகள் இருப்பதால் மக்கள் இந்த வாகனத்தை நம்பி வாங்குவார்கள் என அந்நிறுவம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக லாஸ்ட் மைல் டெலிவரி வாகன உலகில் மிகப்பெரிய புரட்சியே ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சரக்குவாகனங்கள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று சொல்லலாம். ஒரு பொருள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்தால் தான் வியாபாரம் நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். இதனால் நாட்டின் வளர்ச்சி மேலோங்கும். இப்படியாக இந்திய வளர்ச்சிக்கு லாஸ்ட் மைல் வாகனங்கள் மிக முக்கியம். இந்நிலையில் இந்தியாவில் இப்படியாக குறைந்த விலை வாகனம் விற்பனைக்கு வருவது வளர்ச்சியை குறிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 19, 2025, 18:00 [IST]
English summary
Tata ace gold launch price rs 5 52 lakh details
மேலும்... #tata motors #commercial vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+