கேமராவில் சிக்காமல் போய்டலாம்னு நெனைப்பு... உருவாகி வரும் புது டாடா காரை பார்த்தால் விடுவோமா?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் அல்ட்ராஸ் (Altroz) ஒன்றாகும். டாடா மோட்டார்ஸின் சற்று விலைமிக்க பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராக அல்ட்ராஸ் விற்பனை செய்யப்படுகிறது.

டாடா மோட்டார்ஸின் பல கார்கள் பெட்ரோல்/டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமின்றி, எலக்ட்ரிக் (Electric) மற்றும் சிஎன்ஜி (CNG) ஆப்ஷன்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை அதிகம் விற்பனை செய்யும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உள்ளது. சிஎன்ஜி கார்கள் விற்பனையிலும் டாடா நிறுவனம் முன்னணியில் உள்ளது.

tata altroz cng facelift spied

அதிக மைலேஜையும், குறைந்த எரிபொருள் செலவை எதிர்பார்ப்போரின் முதன்மையான தேர்வாக சிஎன்ஜி மாறி வருகின்றன. டாடா நிறுவனத்தில் இருந்து அல்ட்ராஸ் காரும் சிஎன்ஜி வெர்சனில் விற்பனை செய்யப்படுகிறது. அல்ட்ராஸ் சிஎன்ஜி காரை சில வருடங்களுக்கு முன்பில் இருந்தே டாடா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், அல்ட்ராஸ் சிஎன்ஜி காரை அப்டேட் செய்ய வேண்டிய கட்டத்திற்கு டாடா மோட்டார்ஸ் வந்துவிட்டது.

இதன்படி, புதியதாக அல்ட்ராஸ் சிஎன்ஜி ஃபேஸ்லிஃப்ட் (Facelift) காரை டாடா உருவாக்கி வருகிறது. காரின் முன்பக்கம்/ பின்பக்கம் மற்றும் உட்பக்கங்களில் மட்டும் சிறு சிறு அப்டேட்களை கொண்டுவருவதற்கு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என பெயர் ஆகும். அவ்வாறு உருவாக்கப்படும் அல்ட்ராஸ் சிஎன்ஜி ஃபேஸ்லிஃப்ட் கார்கள் அவ்வப்போது பொது சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது.

tata altroz cng facelift spied

அந்த வகையில், தற்போது மீண்டும் ஒரு அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் சோதனை செய்யப்பட்ட போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த முறையும் புதிய அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இருப்பினும், வழக்கம்போல் மறைப்புகளையும் தாண்டி புதிய அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் குறித்த சில விஷயங்கள் நமக்கு தெரிய வந்துள்ளன.

முக்கியமாக, காரின் முன்பக்கத்தில் வழங்கப்படும் ஹெட்லேம்ப்கள் மற்றும் டி.ஆர்.எல்-கள் (DRLs) எந்தவொரு மறைப்பும் இன்றி உள்ளன. அதேபோல், புதிய அல்ட்ராஸ் சிஎன்ஜி காரின் முன்பக்கத்தில் புதியதாக வழங்கப்பட்டுள்ள கிரில் மற்றும் ரீடிசைனிலான பம்பரையும் இந்த ஸ்பை படங்களில் பார்க்க முடிகிறது. மேலும், காரின் முன்பக்கத்தில் ஃபாக் விளக்குகளின் இடத்தையும் மாற்றியுள்ளனர்.

tata altroz cng facelift spied

கிடைமட்டமாக பொருத்தப்பட்டு வரும் ஃபாக் விளக்குகள், புதிய அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் செங்குத்தான வடிவில் பொருத்தப்பட்டுள்ளன. தொழிற்நுட்ப வசதிகளை பொறுத்தவரையில், டாடா நெக்ஸான் (Nexon) கார் சமீபத்தில் தான் அப்டேட் செய்யப்பட்டுள்ளதால், அதில் வழங்கப்பட்ட நிறைய அம்சங்கள் புதிய அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த வகையில், பெரிய அளவிலான இன்ஃபோடெயின்மெண்ட் திரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், ஒளிரக்கூடிய டாடா லோகோ உடன் புதிய 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம், ரீடிசைனில் செண்டர் கன்சோல் & ஏசி மற்றும் தொடுதல் மூலமாக செயல்படக்கூடிய HVAC பேனல் உள்ளிட்டவற்றை புதிய டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி ஃபேஸ்லிஃப்ட் காரில் எதிர்பார்க்கலாம். மற்றப்படி, என்ஜின் சிஸ்டத்தில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய அல்ட்ராஸ் சிஎன்ஜி ஃபேஸ்லிஃப்ட் காரிலும் வழக்கமான அதே 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் தான் வழங்கப்படும். புதிய டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் தயாராகி வருவதாக மட்டுமே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது புதிய அல்ட்ராஸ் சிஎன்ஜி ஃபேஸ்லிஃப்ட் காரும் அறிமுகத்திற்கு தயாராகி வருவது உறுதியாகி உள்ளது.

Source: Team-BHP

More from DriveSpark

Article Published On: Wednesday, April 23, 2025, 18:39 [IST]
English summary
Tata altroz cng facelift spotted while testing in india
மேலும்... #tata motors #tata altroz #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X