7 லட்ச ரூபா காரை இதைவிட சிறப்பா எப்படி உருவாக்க முடியும்? டாடா ஷோரூம்களில் இனி நேரில் பார்க்கலாம்!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் (Altroz Facelift) கார் அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். கடந்த சில வருடங்களுக்கு பிறகு அல்ட்ராஸ் காரில் முக்கியமான அப்டேட்கள் கொண்டுவரப்பட்டு உள்ளதால், புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் மக்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், புதிய டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை குறைவான வேரியண்ட்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் காணலாம்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக இருப்பினும் டாடா மோட்டார்ஸின் கார்கள் விற்பனை கடந்த சில மாதங்களாக வெகுவாக குறைந்துக் கொண்டே வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் வெறும் 37 ஆயிரம் டாடா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு காரணம், அல்ட்ராஸ் போன்ற பிரபலமான டாடா கார்களின் விற்பனை குறைந்திருப்பது ஆகும்.

tata altroz facelift smart car

இதனாலேயே அல்ட்ராஸ் காரை ஃபேஸ்லிஃப்ட்டிற்கு டாடா நிறுவனம் அப்டேட் செய்தது. 2020இல் அறிமுகம் செய்யப்பட்டதற்கு பிறகு இடையில் சிறு சிறு அப்டேட்களை பெற்றிருப்பினும், அல்ட்ராஸ் கார் சமீபத்தில்தான் பெரிய அளவில் அப்டேட் செய்யப்பட்டது. இதன்படி, அல்ட்ராஸ் காரின் வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கம் என இரு பக்கங்களிலும் கவனிக்கத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

எந்த அளவிற்கு புத்துணர்ச்சியான தோற்றம் என்றால், புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை குறைவான 'ஸ்மார்ட்' (Smart) வேரியண்ட்டின் தோற்றம் கூட எவரொருவரையும் கவர்ந்து இழுக்கக்கூடியதாக உள்ளது. அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் ஸ்மார்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை பெட்ரோல் என்ஜின் & மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ரூ.6.89 லட்சமாக உள்ளது.

tata altroz facelift smart car

அதேநேரம், அல்ட்ராஸ் ஸ்மார்ட் வேரியண்ட் ஐ-சிஎன்ஜி (i-CNG) ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.89 லட்சம் ஆகும். இந்த இரு அல்ட்ராஸ் ஸ்மார்ட் கார்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தொழிற்நுட்ப அம்சங்கள் தான் வழங்கப்படுகின்றன. ஆனால், சிஎன்ஜி காரை அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயக்கலாம்.

அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும், ஸ்மார்ட் வேரியண்ட்டில் ஹலோஜன் பல்ப்கள் உடன் புரோஜெக்டர் ஹெட்லைட்கள், காரின் உடல் நிறத்தில் பம்பர்கள் மற்றும் பறித்து இழுக்கக்கூடிய கதவு கைப்பிடிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. காருக்குள் இருந்து பின்பக்கத்தை காண உதவும் கண்ணாடிகளில் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

tata altroz facelift smart car

காருக்கு பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படவில்லை. மேலும், காருக்கு பின்பக்கத்தில் மேற்கூரையில் ஸ்பாய்லரும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், எடை குறைவான வேரியண்ட் என்பதால், காரில் அளவில் சிறியதான இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த சக்கரங்களில் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் வழங்கப்படும் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கார் மொத்தத்தையும் கண்ட்ரோல் செய்வதற்கு ரிமோட் சாவி இந்த காருடன் வழங்கப்படுகிறது. அல்ட்ராஸ் ஸ்மார்ட் வேரியண்ட்டின் உள்ளே அனைத்து 4 கதவுகளிலும் பவர்டு ஜன்னல் கண்ணாடிகள், ஒளிரக்கூடிய டாடா லோகோ உடன் புதியதாக 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் மேனுவல் ஏசி உள்ளிட்டவை முக்கியமான சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா அல்ட்ராஸ் எப்படியாவது குறைந்த விலையிலாவது வாங்கிவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு எண்ட்ரீ-லெவல் ஸ்மார்ட் வேரியண்ட் ஏற்றதாக இருக்கும். இந்த வேரியண்ட்டின் தோற்றம் எவ்வாறு இருக்கும்? காரினுள் வழங்கப்படும் தொழிற்நுட்ப அம்சங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் மூலம் தெளிவாக அறிய முடிகிறது.

Source: Rushlane (https://www.rushlane.com/)

More from DriveSpark

Article Published On: Tuesday, July 8, 2025, 23:59 [IST]
English summary
Tata altroz facelift car smart variant starts to reach dealership showrooms
மேலும்... #tata motors #tata altroz #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X