யாருக்கும் தெரியாம கமுக்கமா போனா மட்டும் விட்ருவோமா? டாடா நிறுவனம் சைலண்ட்டாக உருவாக்கும் புது கார்
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பாதுகாப்புமிக்க கார்களுள் ஒன்றாக அல்ட்ராஸ் (Altroz) விளங்குகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரையில் இந்த காரின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பாகவே இருந்தது. ஆனால், சமீப மாதங்களாக அல்ட்ராஸின் விற்பனை எண்ணிக்கை பெரியதாக பதிவாகாததினால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் (Altroz Facelift) காரை உருவாக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வடிவமைப்பு பணிகளில் இருக்கும் புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று பொது சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய என்சிஏபி கிராஷ் டெஸ்ட் (Global NCAP Crash Test)-இல் நிறைய டாடா கார்கள் 5க்கு முழு 5 நட்சத்திர மதிப்பெண்களை பெற்று ஆச்சிரியப்படுத்தி உள்ளன. அவற்றுள் ஒரு டாடா கார் தான், அல்ட்ராஸ் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சற்று விலைமிக்க பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராக அல்ட்ராஸ் விளங்குகிறது.

விற்பனையில் இதற்கு போட்டியாக மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் குறிப்பாக, பலேனோ காரின் பலத்த போட்டியின் காரணமாகவே டாடா அல்ட்ராஸ் கார்களின் விற்பனை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனை அதிகரிக்கும் முயற்சியாக அல்ட்ராஸ் காரை அப்டேட் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது.
அதன் ஒருபகுதியாக, மேம்படுத்தப்பட்ட அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை வீடியோ (Spy Video) மூலம் புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் எவ்வாறானதாக இருக்கும் என்பது குறித்த ஒரு ஐடியா நமக்கு கிடைக்கிறது.

கார் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டு இருப்பினும், புதிய அல்ட்ராஸ் கார் சற்று வேறுப்பட்ட வடிவத்தில் உருவாக்கப்பட்டு உள்ளதை அறிய முடிகிறது. காரின் முன்பக்கத்தில், தற்போதைய அல்ட்ராஸை காட்டிலும் மெல்லியதான வடிவத்திலான ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. தற்போதைய அல்ட்ராஸ் காரில் ஃபாக் விளக்குகள் ஹெட்லைட்களுக்கு கீழே வழங்கப்படுகின்றன.
ஆனால், புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் ஃபாக் விளக்கின் பொசிஷன் ஆனது மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், புதிய அல்ட்ராஸ் காரின் முன்பக்கத்தில் பெரிய அளவில் C-வடிவில் எலிமெண்ட்கள் இருப்பதை மறைப்பை தாண்டி நம்மால் பார்க்க முடிகிறது. இதன் விளைவாக, அல்ட்ராஸ் காரின் தோற்றம் இப்போது இருப்பதை காட்டிலும் ஸ்போர்டியானதாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த சோதனை ஓட்டத்தில் புதிய அல்ட்ராஸ் காரின் முன்பக்க கிரில் பகுதியின் டிசைன், யாருக்கும் தெரிந்துவிட கூடாது என்பதற்காக மூடப்பட்டு உள்ளது. காரின் அலாய் சக்கரங்கள் மற்றும் வைபர்களின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. முன்பக்க ஹெட்லைட்களை போல், பின்பக்கத்தில் டெயில்லைட்களையும் மெல்லியதான டிசைனில் எதிர்பார்க்கிறோம். இதேபோல், காருக்கு உள்ளேயும் புதிய டிசைனிலான ஸ்டேரிங் சக்கரம் உள்பட நிறைய அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொடர்ந்து குறைந்துக் கொண்டே வரும் விற்பனையை அதிகரிக்க, இவ்வாறான ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்கள் அவசியமாகின்றன. தற்போது நமக்கு கிடைக்க பெற்றிருக்கும் வீடியோவில், புதிய அல்ட்ராஸ் கார் உடன் இன்னொரு டாடா கார் ஒன்றும் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு உள்ளதை பார்க்க முடிகிறது. ஆனால், அது எந்த மாடல் கார் என்பதை அறிய முடியவில்லை.


Click it and Unblock the Notifications









