கேமராவில் சிக்காமல் போய்ட முடியுமா...? டாடா நிறுவனம் கமுக்கமாக உருவாக்கி வரும் புதிய கார்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட உள்ள கார்களுள் ஒன்று, அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் (Altroz Facelift) ஆகும். விற்பனையில் உள்ள அல்ட்ராஸ் காரை ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் தயாராகி வருகிறது. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால், டாடா அல்ட்ராஸ் காரின் முன் மற்றும் பின்பக்கங்களின் தோற்றங்கள் மெருக்கேற்றப்பட உள்ளன. இதற்கிடையில், அறிமுகத்திற்கு முன்னதாக அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாகவே, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் பொது சாலைகளில் எவ்வாறு இயங்குகின்றன என்பது சம்பந்தப்பட்ட கார் நிறுவனங்களால் ஓட்டிப்பார்க்கப்பட்டு சோதனை செய்யப்படுவது வழக்கம். அதேநேரம், காரின் தோற்றம் யாருக்கும் தெரிந்துவிட கூடாது என்பதற்காக கார் முழுவதுமாக மறைப்பால் மறைக்கப்பட்டு இருக்கும்.

இவ்வாறு, புதிய கார்களை சோதனை செய்து பார்ப்பதை தீவிரமாக மேற்கொள்ளும் கார் நிறுவனங்களுள் டாடா மோட்டார்ஸ் ஒன்றாகும். கடந்த காலங்களில் பல்வேறு டாடா கார்கள் பொது வெளியில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளதை பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில்தான் தற்போது புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு உள்ளது.
டாடா மோட்டார்ஸின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் ரக காராக அல்ட்ராஸ் விளங்குகிறது. இந்த காரின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக டாடா நிறுவனம் அல்ட்ராஸை விரைவில் அப்டேட் செய்து அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் ஏற்கனவே சிலமுறை பொது வெளியில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்ட போது கேமராவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. வழக்கம்போல், இந்த முறையும் சோதனை ஓட்டத்தில் புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் யாருக்கும் தெரியாத வகையில் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்டு உள்ளது. காரின் உடல் மட்டுமின்றி, சக்கரங்களும் கூட மறைக்கப்பட்டு உள்ளதை படங்களில் காணலாம்.
இருப்பினும், மறைப்புகளையும் தாண்டி அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் பளிச்சிடும் டி.ஆர்.எல் (DRL)-கள் சோதனை ஓட்டத்தின்போது மிளிர்ந்துள்ளன. தற்சமயம் விற்பனையில் இருக்கும் அல்ட்ராஸ் காரில் டி.ஆர்.எல்-கள் பம்பருக்கு அடியில் வழங்கப்படுகின்றன. ஆனால், புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் முன்பக்க கிரில் பகுதிக்கு மேலே நன்கு அகலமாக காரின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனை வரையில் டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன.

மற்றப்படி, ஹெட்லைட்களின் டிசைனில் மாற்றம் இருப்பதுபோல் தெரியவில்லை. ஆனால், முன்பக்க பம்பரின் டிசைன் கூர்மையானதாக மாற்றப்பட்டு இருப்பதுடன், பம்பருக்கு கீழே எல்இடி ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், இந்த சோதனை ஓட்டத்தில் காரின் அலாய் சக்கரங்கள் கூட மறைக்கப்பட்டு உள்ளதால், புதிய டிசைனிலான அலாய் சக்கரங்கள் புதிய அல்ட்ராஸ் காரில் வழங்கப்படும் என்பது உறுதியாகிறது.
காரின் முன்பக்கத்தை போல், பின்பக்கத்திலும் மெல்லியதான எல்இடி-கள் உடன் புதிய டெயில்லைட்களை அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது வெளியாகி உள்ள ஸபை படங்கள் (Spy Images)-இல் புதிய அல்ட்ராஸ் காரின் உட்புறத்தை காண முடியவில்லை. ஆனால், புதிய அல்ட்ராஸ் கார் டேஸ்போர்டில் 10.25 இன்ச்சில் பெரிய அளவிலான டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளதை இதற்குமுன் வெளியாகி இருந்த ஸ்பை படங்களில் பார்த்திருந்தோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில், டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனை சரிச்செய்ய, புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகம் அவசியமாகிறது. ஆனால், எங்களுக்கு தெரிந்தவரையில் இந்த 2025 தீபாவளி சமயத்தில் தான் புதிய டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். அதுவரையில் இவ்வாறான சோதனை ஓட்டங்களை அடிக்கடி பார்க்கலாம்.
Source: Carwale


Click it and Unblock the Notifications








