மாருதியை கதிகலங்க வைக்க போகும் டாடா தயாரிப்பு... வர்ற மே 21ம் தேதி இந்திய கார் மார்க்கெட்டே அதிர போகுது...

இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய சாலைகளில் டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த புத்தம் புதிய மாடலின் அறிமுக தேதி (Launch Date) வெளியாகியுள்ளது.

இதன்படி டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் வரும் மே 21ம் தேதி (May 21) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உட்புறத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tata Altroz Interior Design

டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உட்புறத்தில், இலுமினேட்டட் லோகோ உடன் 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தற்போது விற்பனையில் உள்ள மாடலில் இருப்பதை காட்டிலும் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அப்டேட் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய அம்சங்களும் வழங்கப்படலாம்.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 360 டிகிரி கேமரா, சன்ரூஃப், புதிய சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற அம்சங்கள் எல்லாம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Altroz

ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மட்டுமே என்பதால், இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலில் வழங்கப்படும் அதே 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள்தான், ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் 1.2 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் தொடர்ந்து வழங்கப்படும். டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno), ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) மற்றும் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) ஆகிய கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா அல்ட்ராஸ் காரின் ஆரம்ப விலை 6.65 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 11.30 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஆனால் ஏராளமான அப்டேட்கள் செய்யப்படும் காரணத்தால், இந்திய சந்தையில் டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று அதிகமாக இருக்கலாம். இருப்பினும் டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 29, 2025, 23:58 [IST]
English summary
Tata altroz facelift launch date may 21 check all details here
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+