ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இவ்வளவு மைலேஜ் தருமா? டாடா அல்ட்ராஸ் காருக்கு டஃப் போட்டி இருக்குதே!

இன்றைய காலகட்டத்தில் குடும்பத்துடன் பயணிக்கும் மனநிலையில் உள்ள மக்கள் தங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது என்பதிலும் மிக கவனமாக இருக்கின்றனர். அதிக மைலேஜ் தரும் கார் ஒரு நடுத்தர குடும்பத்தின் செலவை மிச்சப்படுத்த நல்ல வழி வகுக்கிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மைலேஜை வழங்கும் கார்களை தயாரித்து வருகின்றனர். இப்படியாக சமீபத்தில் வெளியான டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது. இதன் போட்டி நிறுவன தயாரிப்புகள் எவ்வளவு மைலேஜ் தருகிறது என்ற ஒப்பீட்டை இங்கே காணலாம்.

டாடா நிறுவனம் சமீபத்தில் தான் தனது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட அல்ட்ராஸ் காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் ரூ6.89 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த காரில் செக்மெண்டிலேயே அதிகமானஅம்சங்கள் கொண்ட காராக அறிமகமாகியுள்ளன. இந்த காருக்கு போட்டியாக மார்கெட்டில் மாருதி பலேனோ, ஹூண்டாய் ஐ20, டொயோட்டா கிளான்ஸா ஆகிய கார்கள் விற்பனையாகியுள்ளனன.

Tata Altroz Mileage Comparison

தற்போது அறிமுகமாகியுள்ள டாடா அல்ட்ராஸ் காரில் அதிகபட்சமாக அதன் சிஎன்ஜி வேரியன்டில் 26.90 கி.மீ மைலேஜ் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே மாருதி பலேனோ மற்றம் டொயோட்டா கிளான்ஸா காரை பொருத்தவரை சிஎன்ஜி வேரியன்டில் 30.61 கி.மீ மைலேஜை வழங்குகிறது.

டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி வேரியன்ட் காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜினை பயன்படுத்துகிறது. இது 73.5 பிஎஸ் பவரையும் 103 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது.

Tata Altroz Mileage Comparison

ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 காரில் தற்போது சிஎன்ஜி வேரியன்ட் இல்லை. மாருதி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா காரில் உள்ள சிஎன்ஜி வேரியன்டில் 1.2 லிட்டர் பை-ஃப்யூயல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 77.5 பிஎஸ் பவரையும் 98.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பீட்டை பார்க்கும் போது மாருதி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா ஆகிய கார்களை தான் மக்கள் வாங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் மக்கள் பலர் டாடா அல்ட்ராஸ் காரை தேர்வு செய்யவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த காரில் 210 லிட்டர் பூட் இட வசதி இருக்கிறது. அதிக லக்கேஜ் தேவைப்படும் நபர்களுக்கு இது வசதியாக இருக்கும். இந்த காரில் உள்ள டுயல் சிலிண்டர் செட்டப் இருக்கிறது.

Tata Altroz Mileage Comparison

பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மெண்டில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் இருக்கும் ஒரே கார் டாடா அல்ட்ராஸ் கார் தான். இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்ப்டடுள்ளது. டீசல் இன்ஜினில் இந்த கார் 23.60 கி.மீ மைலேஜை வழங்குகிறது. மாருதி பலேனோ மற்றம் ஹூண்டாய் ஐ20 கார்களில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் முன்னர் இருந்தது. தற்போது இது நிறுத்தப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸ் பெட்ரோல் இன்ஜின் கார்18-20 கி.மீ மைலேஜை வழங்குகிறது. அதே நேரம் போட்டி தயாரிப்பாளர்களான பலேனோ கார் 22.35 கி.மீ மைலேஜை 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் யூனிட்டிலும், 22.94 கி.மீ மைலேஜை 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் யூனிட்டிலும் தருகிறது. ஹூண்டாய் ஐ20 கார் 20-21 கி.மீ மைலேஜை மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் யூனிட் உடன் தருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மைலேஜ் அடிப்படையில் பார்க்கும் போது டாடா அல்ட்ராஸ் காரை விட போட்டி நிறுவனங்கள் சற்று அதிகமான மைலேஜை தருகின்றன. ஆனால் அம்சங்கள், வடிவமைப்பு, வசதிகள் என்ற விதத்தில் பார்க்கும் போது இந்த டாடா அல்ட்ராஸ் கார் போட்டி தயாரிப்புகளை விட சிறந்த காராக இருக்கிறது. அதனால் இதன் விற்பனை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 27, 2025, 18:55 [IST]
English summary
Tata altroz facelift mileage comparison with baleno glanza and i20
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X