இந்த டாடா காரை வாங்க பல லட்ச ரூபாய் செலவு பண்ணனும்னு அவசியம் இல்ல! ரூ.6.89 லட்சத்தில் இருந்து விலைகள்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து புதியதாக அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் (Altroz Facelift) கார் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அல்ட்ராஸ் கார்கள் விற்பனை குறைந்து வந்ததை அடுத்து, அல்ட்ராஸ் காரை ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்டேட் செய்து டாடா நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட், பியூர், கிரியேட்டீவ், அக்கம்ப்ளீஷ்டு எஸ் மற்றும் அக்கம்ப்ளீஷ்டு+ எஸ் உள்ளிட்ட வேரியண்ட்களில் புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு வேரியண்ட்களிலும் என்னென்ன மாதிரியான வசதிகளை பெறலாம் என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஸ்மார்ட் (Smart): புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை குறைவான, எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் இதுவாகும். ரூ.6.89 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கக்கூடிய இந்த வேரியண்ட்டில் கூட 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ரிமைண்டர் உடன் 3-பாயிண்ட் சீட்பெல்ட்கள், பறித்து இழுக்கக்கூடிய கதவு கைப்பிடிகள் போன்ற நவீன அம்சங்களை பெறலாம்.

altroz facelift variants-wise features explain

இவை மட்டுமின்றி, எல்இடி டெயில்லைட்கள், ஸ்மார்ட் டிஜிட்டல் ஸ்டேரிங் சக்கரம், புரோஜெக்டர் ஹெட்லைட்கள், ரிமோட் மூலமாக சாவியில்லாமல் காருக்குள் நுழையும் வசதி, அனைத்து 4 கதவுகளிலும் பவர் ஜன்னல் கண்ணாடிகள், எந்த என்ஜின் உடன் வாங்கினாலும் அதிக டிரைவ் மோட்கள் (Drive Modes) மற்றும் பெட்ரோல் என்ஜின் & மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ஐடியல் ஸ்டாப் வசதியையும் ஸ்மார்ட் வேரியண்ட்டில் பெறலாம்.

பியூர் (Pure): ரூ.7.69 லட்சத்தில் இருந்து எக்ஸ்-ஷோரூம் விலையை பெற்றுள்ள பியூர் வேரியண்ட்டில் 17.78 செமீ-இல் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, தானாக மடங்கக்கூடிய ORVM-கள், ஆட்டோமேட்டிக் வெப்பநிலை கண்ட்ரோல், உயரத்தை அட்ஜெஸ் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, க்ரூஸ் கண்ட்ரோல், இரட்டை நிறங்களில் சக்கரங்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் மழை வருவதை உணர்ந்து செயல்படக்கூடிய வைபர்கள் உள்ளிட்டவை ஸ்மார்ட் வேரியண்ட்டை காட்டிலும் கூடுதலாக வழங்கப்படுகின்றன.

altroz facelift variants-wise features explain

கிரியேட்டீவ் (Creative): ரூ.8.69 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து விலையை பெற்றுள்ள இந்த வேரியண்ட்டில், பியூர் வேரியண்ட்டில் கிடைக்காத 360-டிகிரி எச்டி சரவுண்ட்-வியூ கேமரா, 26.03 செமீ அல்ட்ரா-வியூ எச்டி இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எல்இடி ஹெட்லைட்கள் & டிஆர்எல்-கள், ஆர்16 ட்யூயல்-டோன் ஹைப்பர் ஸ்டைல் சக்கரங்கள், பொத்தானை அழுத்துவதன் மூலமாக என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி உள்பட பல வசதிகளை பெறலாம்.

அக்கம்ப்ளீஷ்டு எஸ் (Accomplished S): இந்த டாப் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.99 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலே கண்ட கிரியேட்டீவ் வேரியண்ட்டில் கிடைக்காத 17.78 செமீ இன்ஃபோடெயின்மெண்ட் திரை, எல்இடி ஃபாக் விளக்குகள், குரல் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய இரு நிறங்களிலான எலக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளிட்டவற்றை இந்த வேரியண்ட்டில் பெறலாம்.

altroz facelift variants-wise features explain

மேலும், க்யூ.ஐ சப்போர்ட் உடன் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், எக்ஸ்பிரெஸ் கூல், 4-ட்விட்டர்ஸ், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், உயரத்தை அட்ஜெஸ் செய்யக்கூடிய சீட் பெல்ட் மற்றும் டிரைவருக்கு பக்கத்தில் ஒரேயொரு பொத்தானை அழுத்துவதன் மூலம் மூடக்கூடிய ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவற்றையும் அக்கம்ப்ளீஷ்டு எஸ் வேரியண்ட்டில் பெறலாம்.

அக்கம்ப்ளீஷ்டு+ எஸ் (Accomplished+ S): அக்கம்ப்ளீஷ்டு எஸ் வேரியண்ட்டை காட்டிலும் விலைமிக்கது, அக்கம்ப்ளீஷ்டு+ எஸ் வேரியண்ட் ஆகும். ஆனால், இது பெட்ரோல் என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டும் கிடைக்கும். அக்கம்ப்ளீஷ்டு எஸ் வேரியண்ட்டில் கூட கிடைக்காத இன்ஃபினிட்டி எல்இடி டெயில்லைட்கள், டிராக் கட் ஆர்16 அலாய் சக்கரங்கள், அல்ட்ரா-வியூ 26.03 செமீ எச்டி டிஜிட்டல் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றை அக்கம்ப்ளீஷ்டு+ எஸ் வேரியண்ட்டில் பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஒவ்வொரு வேரியண்ட்டிலும் என்னென்ன மாதிரியான வசதிகளை பெறலாம் என்பதை சிறு குறிப்பாகவே இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இன்னும் என்னென்ன மாதிரியான வசதிகள் இந்த வேரியண்ட்டில் கிடைக்கும் என்பதை விரிவாக அறிய அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற டாடா டீலர்ஷிப் ஷோரூமை (Dealership Showroom) அணுகலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 23, 2025, 5:00 [IST]
English summary
Tata altroz facelift variants wise features explain check all details here
மேலும்... #tata motors #tata altroz #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X