இப்படி ஒரு வண்டிய வெளியிட்டா யாரு தான் வாங்க மாட்டாங்க! சேல்ஸ் குவியப்போகுது!

டாடா நிறுவனம் சமீபத்தில் தான் தனது அல்ட்ராஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்டது. கடந்த 2019ம் ஆண்டில் இந்த கார் முதன் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மிகப்பெரிய அப்டேட் இப்பொழுது தான் செய்யப்பட்டுள்ளது. பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களில் மக்கள் மத்தியில் பெயர் பெற்ற இந்த காரில் மக்கள் நீண்ட நாட்களாக பெரிய அப்டேட்டை எதிர்பார்த்த நிலையில் இந்த அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிதாக அப்டேட் செய்த டாடா அல்ட்ராஸ் காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. இந்த காரை நமது குழுவினர் பெங்களூரு சாலைகளில் ஓட்டி பார்த்தனர். டீசல் இன்ஜின் மற்றும் சிஎன்ஜி மூலம் இயங்கும் கார்களை ஓட்டி பார்த்தோம். இந்த டிரைவிங்கின் போது எங்களுக்க கிடைத்த அனுபவத்தை உங்களுடன் வீடியோவாக பகிர்ந்துள்ளோம். முழுமையான வீடியோவை கீழே காணுங்கள்

இந்தியாவில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கொண்ட ஒரே பிரிமியம் ஹேட்ச் பேக் கார் இது தான். போட்டி நிறுவன தயாரிப்புகள் எல்லாம் பெட்ரோல் மட்டும் சிஎன்ஜி வேரியன்டகளில் மட்டுமே இந்த ரக கார்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ள நிலையில் இந்தஅப்டேட்டில் இன்ஜின் விபரங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் பழைய காரில் உள்ள அதே இன்ஜின் தான் இதிலும் பொருத்தப்படுகிறது.

Tata Altroz Facelift

இந்த காரில் வெளிப்புறத்தில் முக்கியமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக முன்பக்கம் பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பக்கவாட்டில் பெரும்பாலான வடிவமைப்பு அப்படியே தான் இருக்கிறது. 16 இன்ச் அலாய் வீல்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கம் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய அளவில் வாடிக்கயாளர்களை ஈர்த்துள்ளது.

இந்த கார் ரூ6.85 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் விலை விஷயத்தில் போட்டி நிறுவன தயாரிப்புகளுடன் ஒப்பிடும் போது ஒரு சில வேரியன்ட்கள் விலை அதிகமாகவோ குறைவாகவோ இருக்கிறது. ஆனால் இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் இந்த செக்மெண்டிலேயே முதன்முறையாக உள்ள பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது நிச்சயம் மக்களை அதிகம் கவரும்

More from DriveSpark

Article Published On: Wednesday, May 28, 2025, 11:35 [IST]
English summary
Tata altroz facelift watch review video in tamil
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+