மாருதிக்கு சங்கு ஊத போகும் 27 கிமீ மைலேஜ் கார்... இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா... நாள் குறிச்சுட்டாங்க!
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno), டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வரும் டாடா அல்ட்ராஸ் காருடைய நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை மிக கடுமையான சரிவை சந்தித்திருப்பது தெரிய வருகிறது.
அதாவது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5,148 அல்ட்ராஸ் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 2,172 ஆக குறைந்துள்ளது. இது 58 சதவீத வீழ்ச்சி ஆகும்.

ஆனால் இது தற்காலிகமான சரிவாக மட்டுமே இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் (2025 Tata Altroz Facelift) மாடல், இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
டாடா அல்ட்ராஸ் காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி (Launch Date) ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதன்படி 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் மே 22ம் தேதி (May 22) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சுமார் ஒரு வார காலம் மட்டுமே இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. இன்னும் விலை எவ்வளவு? என்பது அறிவிப்பது மட்டும்தான் பாக்கி. 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கும். அவை ப்யூர் க்ரே, ராயல் ப்ளூ, எம்பர் க்ளோ, ட்யூன் க்ளோ மற்றும் ப்ரிஸ்டன் ஒயிட் ஆகியவை ஆகும்.
கலர் ஆப்ஷன்களின் எண்ணிக்கையை போல், புத்தம் புதிய 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வேரியண்ட்களின் (Variants) எண்ணிக்கையும் கூட ஐந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது. அவை ஸ்மார்ட், ப்யூர், க்ரியேட்டிவ், அக்காம்ப்ளீஸ்டு எஸ் மற்றும் அக்காம்ப்ளீஸ்டு ப்ளஸ் எஸ் ஆகியவை ஆகும்.
இந்த புதிய மாடலின் டிசைனை (Design) பொறுத்தவரையில், ஃப்ளஸ் டைப் டோர் ஹேண்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் புதிதாக டிசைன் செய்யப்பட்ட 16 இன்ச் அலாய் வீல்கள், பம்பர்கள், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், எல்இடி பனி விளக்குகள் மற்றும் க்ரில் ஆகியவற்றுடன், டாடா அல்ட்ராஸ் காரின் டிசைன் மெருகேற்றப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பழைய மாடலை போலவே, புதிய மாடலிலும், 90 டிகிரி கோணத்தில் திறக்கும் கதவுகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே பயணிகள் ஏறுவதும், இறங்குவதும் எளிதாக இருக்கும். வசதிகளை (Features) பொறுத்தவரையில், டேஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ள 10.25 இன்ச் அளவுடைய 2 திரைகள் முக்கியமானதாகும்.
இதில், ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கானது. மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கானது. இவை தவிர க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஏர் ப்யூரிஃபையர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், சன்ரூஃப் ஆகிய வசதிகள் வழங்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பை (Safety) பொறுத்தவரை, இது ஏற்கனவே குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனையில், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. இது தவிர அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகளையும், புதிய மாடல் கொண்டிருக்கும்.
செயல்திறனை பொறுத்தவரையில் தற்போதைய மாடலில் வழங்கப்படும் அதே 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் சிஎன்ஜி மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள்தான் (Engine Options), ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், அதிகபட்சமாக சிஎன்ஜி இன்ஜினின் மைலேஜ் (Mileage) ஒரு கிலோவிற்கு 26-27 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை சுமார் 7 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, அதன் நேரடி போட்டி மாடல்களான, மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா மற்றும் ஹூண்டாய் ஐ20 ஆகிய கார்களுக்கு, விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன என நாங்கள் கருதுகிறோம்.
ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வரவுள்ள காரணத்தால்தான், டாடா அல்ட்ராஸ் காரின் தற்போதைய மாடலின் விற்பனை சரிவை சந்தித்திருக்கும் என கருதப்படுகிறது. புதிய மாடல் விற்பனைக்கு வருவதற்கு முன்பாக பழைய மாடலின் விற்பனை சரிவடைவது வழக்கமான ஒன்றுதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








