எமனே நெனச்சாலும் தொட கூட முடியாது! பாதுகாப்பான டாடா கார் விலையை இவ்ளோ குறைச்சுட்டாங்களா! மாருதி சோலி முடின்ச்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 3,959 டாடா அல்ட்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 3,031 ஆக மட்டுமே இருந்தது.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 928 டாடா அல்ட்ராஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டாடா அல்ட்ராஸ் கார் விற்பனையில் 31 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
இந்த வளர்ச்சியின் காரணமாக, நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் ரக கார்களின் பட்டியலில் (Top 10 Hatchbacks August 2025), டாடா அல்ட்ராஸ் காருக்கு 7வது இடம் கிடைத்துள்ளது.

முதல் 6 இடங்களில் முறையே, மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift), மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto), டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) ஆகிய கார்கள் உள்ளன.
இந்த பட்டியலில் 7வது இடம் பிடித்திருந்தாலும் கூட, இந்த பட்டியலில் விற்பனையில் அதிக வளர்ச்சி சதவீதத்தை பதிவு செய்த கார் என்ற பெருமையை டாடா அல்ட்ராஸ் கொண்டுள்ளது. அதாவது டாடா அல்ட்ராஸ் அளவிற்கு வேறு எந்த காரும் விற்பனையில் அதிக வளர்ச்சியை சந்திக்கவில்லை.
டாடா அல்ட்ராஸ் காரின் வளர்ச்சிக்கு, பாதுகாப்பு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும், டாடா அல்ட்ராஸ் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது.
மிகவும் பாதுகாப்பானது என்றாலும் கூட, ஓரளவிற்கு குறைவான விலையிலேயே டாடா அல்ட்ராஸ் காரை உங்களால் வாங்கி விட முடியும். தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.30 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 10.51 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
இவை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். டாடா அல்ட்ராஸ் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் போன்ற வசதிகளையும் (Features) டாடா அல்ட்ராஸ் கார் கொண்டுள்ளது.
அத்துடன் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 26.03 செமீ ஹெச்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 26.03 செமீ ஹார்மன் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஏர் ப்யூரிஃபையர், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற வசதிகளும், டாடா அல்ட்ராஸ் காரில் வழங்கப்படுகின்றன.
இவை எல்லாம் தவிர, எளிதாக ஏறி, இறங்க வசதியாக 90 டிகிரி கோணத்தில் திறக்கும் டோர்கள், ரியர் ஏசி வெண்ட்கள், அதிக பொருட்களை வைத்து கொள்ள ஏதுவாக 345 லிட்டர் பூட் ஸ்பேஸ், கூல்டு க்ளவ் பாக்ஸ், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான டிரைவர் இருக்கை போன்ற வசதிகளும் டாடா அல்ட்ராஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. செயல்திறனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் சிஎன்ஜி மற்றும் 1.5 லிட்டர் டீசல் என டாடா அல்ட்ராஸ் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பால், டாடா அல்ட்ராஸ் காரின் விலை தற்போது 1.10 லட்ச ரூபாய் வரை குறைந்துள்ளது. எனவே இது டாடா அல்ட்ராஸ் காரை வாங்க மிகச்சிறந்த நேரமாக கருதப்படுகிறது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா மற்றும் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) ஆகிய கார்களுக்கு எல்லாம், டாடா அல்ட்ராஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது.


Click it and Unblock the Notifications








