அடிபட்ட சிங்கத்தோட மூச்சு காத்து கர்ஜனைய விட பயங்கரமா இருக்கும்! எகிறி அடிக்க போகும் டாடா! கலக்கத்தில் மாருதி!

இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இதன் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம், 2,779 அல்ட்ராஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம், 4,983 டாடா அல்ட்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 2,204 டாடா அல்ட்ராஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2025 Tata Altroz

இது 44 சதவீத வீழ்ச்சி ஆகும். ஆனால் இந்த வீழ்ச்சி தற்காலிகமானதாக மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது. புரியும்படி சொல்வதென்றால், டாடா அல்ட்ராஸ் காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் கடந்த மே 22ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த புதிய மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள், நடப்பு ஜூன் மாதம் 2ம் தேதிதான் தொடங்கின. எனவே வரும் மாதங்களில் டாடா அல்ட்ராஸ் கார் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என கருதப்படுகிறது. பொதுவாக புதிய மாடல் வரும்போது, கார்களின் விற்பனை குறைவது வழக்கமான ஒன்றுதான்.

2025 Tata Altroz Front Design

பழைய மாடலை காட்டிலும், புதிய மாடலின் டிசைன் மேம்பட்டிருக்கும். அத்துடன் கூடுதலாக புதிய வசதிகளும் வழங்கப்பட்டிருக்கும். எனவே பழைய மாடலை காட்டிலும், புதிய மாடலை வாங்குவதற்குதான் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள். இதன் காரணமாக காரை வாங்கும் முடிவை சற்று தள்ளி வைப்பார்கள்.

டாடா அல்ட்ராஸ் காரின் கடுமையான வீழ்ச்சிக்கு இதுவே காரணமாக இருக்கும் எனவும், தற்போது புதிய மாடல் வந்து விட்டதால், வரும் மாதங்களில் இந்த சரிவில் இருந்து டாடா அல்ட்ராஸ் மீண்டு விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை 6.89 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வசதிகளை (Features) பொறுத்தவரையில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.

அத்துடன் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் மற்றும் 8 ஸ்பீக்கர் ஹார்மன் ஆடியோ சிஸ்டம் போன்றவையும், 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மிக முக்கியமான வசதிகளாக உள்ளன. ஆனால் வேரியண்ட்களை பொறுத்து, வசதிகள் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் 6 ஏர்பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் ஆகிய வசதிகள், 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன. அதாவது இந்த வசதிகள் எல்லாம், 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) ஆகிய கார்களுக்கு எல்லாம், டாடா அல்ட்ராஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 24, 2025, 23:43 [IST]
English summary
Tata altroz sales report may 2025 44 per cent down
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+