எமனே எதிர்ல வந்தாலும் பாத்துக்கலாம்னு தைரியமா போகலாம்! மாருதி, ஹூண்டாய்க்கு டஃப் குடுக்கும் டாடா கார்!

இந்திய சந்தையில் ஏராளமான பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்கள் (Premium Hatchback Cars) விற்பனைக்கு கிடைக்கின்றன. இதில், டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டாடா அல்ட்ராஸ் திகழ்கிறது.

அத்துடன் மாருதி சுஸுகி பலேனோ காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனான டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) காருடனும், டாடா அல்ட்ராஸ் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது. சரியான விலை (Price) நிர்ணயம் மற்றும் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் (Safety Features) போன்ற காரணங்களால், ஒவ்வொரு மாதமும், டாடா அல்ட்ராஸ் கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து கொண்டுள்ளது.

2025 Tata Altroz Side Design

இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதமும் டாடா அல்ட்ராஸ் கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தியுள்ளது. காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 3,770 டாடா அல்ட்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம், வெறும் 2,642 டாடா அல்ட்ராஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 1,128 டாடா அல்ட்ராஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2025 Tata Altroz

இதன் மூலம் டாடா அல்ட்ராஸ் கார் விற்பனையில் 43 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா அல்ட்ராஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6.30 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.51 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகான எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஜிஎஸ்டி வரி குறைப்பால் டாடா அல்ட்ராஸ் காரின் விலை 1.12 லட்ச ரூபாய் வரை குறைந்துள்ளது. இது டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இதுதவிர நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், டாடா அல்ட்ராஸ் காரில், ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் நிரம்பியுள்ளன. டாடா அல்ட்ராஸ் காரானது, பாரத் என்சிஏபி (Bharat NCAP) மற்றும் குளோபல் என்சிஏபி (Global NCAP) என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் பாதுகாப்பான ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டாடா அல்ட்ராஸ் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. டாடா அல்ட்ராஸ் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டாடா அல்ட்ராஸ் காரின் வளர்ச்சிக்கு ஒரு வகையில் இதுவும் ஒரு மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 20, 2025, 18:24 [IST]
English summary
Tata altroz sales report october 2025 43 per cent growth
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+