எமன் கண்ணுலயே விரலை விட்டு ஆட்டும் டாடா கார்! விலை இவ்ளோதானா! மாருதி, டொயோட்டாவுக்கு டஃப் குடுக்குது!
இந்தியாவில் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) செக்மெண்ட்டை சேர்ந்த கார்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) காருக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டாடா அல்ட்ராஸ் பதிவு செய்து வருகிறது.
இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. டாடா அல்ட்ராஸ் காரின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 4,168 அல்ட்ராஸ் கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 2,758 ஆக மட்டுமே இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 1,410 டாடா அல்ட்ராஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் டாடா அல்ட்ராஸ் கார் விற்பனையில் 51 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் இந்த வளர்ச்சியின் காரணமாக, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் (Top 10 Hatchbacks September 2025), டாடா அல்ட்ராஸ் காருக்கு, 7வது இடம் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 6 இடங்களில் முறையே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், மாருதி சுஸுகி வேகன் ஆர், மாருதி சுஸுகி பலேனோ, டாடா டியாகோ, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மற்றும் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஆகிய கார்கள் உள்ளன. இந்த வரிசையில் 7வது இடம் பிடித்துள்ள டாடா அல்ட்ராஸ், மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகும்.
குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும், டாடா அல்ட்ராஸ் கார், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) வாங்கி அசத்தியுள்ளது. இது கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் ஆகும்.
5 ஆண்டுகளை கடந்த பின்னரும் கூட, டாடா அல்ட்ராஸ் கார் தற்போதும் 'ஃப்ரெஷ்' ஆக உள்ளது. இதற்கு கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா அல்ட்ராஸ் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல்தான் காரணம்.
டாடா அல்ட்ராஸ் காரில் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல்+சிஎன்ஜி மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு ஏஎம்டி மற்றும் 6 ஸ்பீடு டிசிடி என 3 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் பெட்ரோல்+சிஎன்ஜி மற்றும் டீசல் இன்ஜின்கள் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது. வசதிகளை (Features) பொறுத்தவரையில், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட்கள் உடன் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் டாடா அல்ட்ராஸ் காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா அல்ட்ராஸ் காரின் ஆரம்ப விலை வெறும் 6.30 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 10.51 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை டாடாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் டொயோட்டா க்ளான்சா ஆகிய கார்களுக்கு எல்லாம், டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. குறிப்பாக அதிக பாதுகாப்பை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்கள், டாடா அல்ட்ராஸை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








