காரா இல்ல 5 ஸ்டார் ஹோட்டலா! உலகையே மிரள விட போகும் டாடா! இவ்ளோ குறைவான விலையில் களமிறக்க போறாங்களா!
இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரையில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) மற்றும் எம்ஜி மோட்டார் (MG Motor) போன்ற நிறுவனங்கள், எலெக்ட்ரிக் கார் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளன.
குறிப்பாக மஹிந்திரா நிறுவனத்தின் பிஇ 6 (Mahindra BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்கள், இந்திய சந்தையில் தற்போது அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. இதற்கு முட்டுக்கட்டை போட டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிரடியான திட்டங்களை வகுத்து வருகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு அவின்யா இவி (Tata Avinya EV) என்ற எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதை தற்போது தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தி, விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
முதலில் டாடா அவின்யா இவி என்பது ஒரே ஒரு எலெக்ட்ரிக் கார் என்று மட்டுமே தோன்றியது. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அவின்யா என்ற பிராண்டின் கீழ், ஏராளமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அவின்யா பிராண்டின் கீழ், தனது முதல் எலெக்ட்ரிக் காரை, வரும் 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அவின்யா பிராண்டின் கீழ் விற்பனைக்கு வரும் எலெக்ட்ரிக் கார்கள் மிகவும் அதிநவீனமான வசதிகளை கொண்டிருக்கும்.
இதன் தோற்றம் வழக்கமான எலெக்ட்ரிக் கார்களை போல் அல்லாமல், முற்றிலும் வித்தியாசமான ஒன்றாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் இது எதிர்காலம் சார்ந்த ஒரு அதிநவீன எலெக்ட்ரிக் காராக இருக்கும். மறுபக்கம் விமான நிலையம் மற்றும் ஹோட்டல்களில் இருக்கும் ஓய்வறைகளை போன்று, இதன் உட்புறம் சொகுசாக வடிவமைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செயல்திறனை பொறுத்தவரை, அவின்யா பிராண்டின் கீழ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் முதல் எலெக்ட்ரிக் காரில், ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 500 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தொலைவு பயணம் செய்ய கூடிய வகையிலான பேட்டரி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 500 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பதால், தொலை தூர பயணங்களையும் எளிமையாக மேற்கொள்ள முடியும்.
இப்படி ஏராளமான சிறப்பம்சங்களை கொண்டுள்ள அவின்யா பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் காரின் விலை (Price) அனேகமாக வெறும் 25 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மணி கண்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு என்பது அறிவிக்கப்படும்.
ஆனால் இந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், மஹிந்திரா பிஇ 6 மற்றும் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களுக்கும், அவின்யா பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் கார், மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய ஜென் 3 இவி பிளாட்பார்ம் அடிப்படையில், அவின்யா எலெக்ட்ரிக் கார்கள் கட்டமைக்கப்படவுள்ளன. இது எலெக்ட்ரிக் கார்களுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் பிளாட்பார்ம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அவின்யா பிராண்டின் கீழ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள எலெக்ட்ரிக் கார்கள், எதிர்காலத்தில் டெஸ்லா (Tesla) எலெக்ட்ரிக் கார் உடனும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள், அந்த அளவிற்கு அதிநவீனமாக மாறவிருப்பது நல்ல விஷயம்தான்.


Click it and Unblock the Notifications








