இந்த கார் மட்டும் வந்துச்சுன்னா எல்லாரும் காலி தான்! எப்ப வருது தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்டரிக் வாகன அணி வகுப்பை விரிவுபடுத்தும் வகையில் புதிதாக ஹாரியர் இவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காருடன் சேர்த்து மொத்தம் 6 எலெக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் மற்றொரு எலெக்ட்ரிக் காராக டாடா சியாரா இவி காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் பல ஆண்டுகளாக கான்செப்டில் இருக்கும்டாடா அவ்னியா காருக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உலகில் புதிய கட்டமைப்பை உருவாக்கும் போதே தனது அவினியா காரின் கான்செப்ட் வெர்ஷனை வெளியிட்டது. இந்த கார் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. அப்பொழுதே வித்தியாசமான வடிவமைப்பை பார்த்து மக்கள் வியந்தினர்.இந்தகார் சாலையில் செல்லும் போது மக்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்க்கும் என்ற பேச்சு மக்கள் மத்தியில் இருந்தது.

Tata Avniya

நீண்ட ஆண்டுகளாக இந்த கார் கான்செப்ட் அளவிலேயே இருக்கிறது. தயாரிப்புக்கு தயாராவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. கடந்த 2025ம் ஆண்டு இந்த கார் முதன் முறையாக கான்செப்ட் வெர்ஷனில் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் சுமார் 3 ஆண்டுகள் ஆகியும் இந்த கார் தயாரிப்புக்கு வராததற்க பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.

டாடா நிறுவனம் ஜாக்கவார் லேண்ட் ரோவர் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. அதன்படி ஜாக்குவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் இஎம்ஏ ஆர்க்கிடெக்ஷர் கட்டுமானத்தில் தான் இந்த காரை உருவாக்கப்போவதாக இந்நிறுவனம் முடிவு செய்திருந்தது.இதற்கிடையில் தமிழ்நாட்டில் ஜாக்குவார் லேண்ட்ரோவர் நிறுவனம் புதிய தயாரிப்பு ஆலையை துவங்க திட்டமிட்டிருந்தது. ஆனால் அதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

Tata Avniya

இந்த தமிழ்நாட்டு ஆலையில் தான் இந்த காரை தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்திருந்தது. இந்நிலையில் டாடா நிறுவனம் வேறு வழிகளை தற்போது தேட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது டாடா நிறுவனமே சொந்தமாக இஎம்ஏ கட்டுமான தளத்தை வாங்க வேண்டும். அல்லது மற்ற குரூப்பில் உள்ள கட்டுமான தளத்தை பயன்படுத்த வேண்டும். இதற்கான முயற்சியில் தான் தற்போது டாடா இருக்கிறது.

டாடா நிறுவனம் தற்போது வெளியிடும் எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் 2ம் தலைமுறை ஆக்டி.இவி என்ற கட்டுமான தளத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது. இந்தாண்டு இறுதியில் வெளியாகவுள்ள டாடா சியாரா இவி காரும் இந்த கட்டுமான தளத்தில்தான் உருவாக்கப்படுகிறது. இந்த தளம் ஏற்கனவே கம்பெஷன் இன்ஜின் கார்களை எலெக்ட்ரிக் வெர்ஷனாக பயன்படுத்த உதவும் தளமாக இருக்கிறது.

Tata Avniya

டாடா அவினியா கார் மட்டுமே 3ம் தலைமுறை ஸ்கேட் போர்டு தளத்தில் உருவாக்கப்படுகிறது. இந்த கார் எலெக்ட்ரிக் காருக்கான தனித்துவமான ஃபிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. தற்போது கம்பஷன் இன்ஜின் கார்களின் ஃபிளோர் பகுதி பேட்டரிக்காக உயர்த்தப்படுகிறது. ஆனால் அவினியா காரில் அப்படியான கட்டுமானங்கள் இல்லாமல் இருக்கும். இது போக இந்த காரின் கேபின் வடிவமைக்கப்படும் போதே எலெக்ட்ரிக் காருக்கான அம்சங்களை மனிதில் வைத்து வடிவமைக்கப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் 2027ம் ஆண்டு தான் விற்பனைக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் விற்பனைக்கு வந்தால் மிகப்பெரிய அளவில் புரட்சியே ஏற்படும் என எதிர்பார்க்கலாம். இந்த காரின் வருகைக்காக பலர் காத்திருக்கிறார்கள். இந்தகார் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 4, 2025, 20:20 [IST]
English summary
Tata avniya planning to launch on 2027 full details
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X