டாடா கார்களின் விலை ரூ1.55 லட்சம் குறையுது! இன்னும் 15 நாள் கழிச்சு வாங்குனா இவ்வளவு லாபமா?
ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டாடா நிறுவனம் தனது கார்களின் விலை ரூ1.45 லட்சம் வரை குறைக்கப்படும் என்றும், ஜிஎஸ்டி குறைப்பிற்கான பலன்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க அந்நிறவனம் முடிவு செய்துள்ளுது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வருகிறது. இதனால் 28 சதவீத்திற்கு விற்பனையாகி வந்த பெரும்பாலான கார்கள் 18 சதவீத வரி விதிப்பிற்குள் வருகிறது. சில பெரிய ரக கார்கள் 40 சதவீத வரி விதிப்பிற்குள் செல்கிறது. எப்படி பார்த்தாலும் கார்களுக்கு செலு்த்த வேண்டிய வரி 10 சதவீதம் வரை குறைகிறது.

இந்நிலையில் டாடா நிறுவனம் ஜிஎஸ்டி மாற்றத்திற்கு பிறகான விலை விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஜிஎஸ்டியால் கிடைக்கும் பலன்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கே வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி பார்த்தால் அந்நிறுவனம் வாகனத்தின் விலையில் எந்த உயர்வையும் செய்யாமல் விலையில் 18 சதவீதம் அல்லது 40 சதவீத வரி விதிப்பை மட்டுமே வசூலிக்கப்பபோவதாக அறிவித்துள்ளது.
இதனால் ஜிஎஸ்டி குறைப்பிற்கு பிறகு வாகனத்தின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. எந்தெந்த வாகனத்தின் விலை எவ்வளவு குறையும் என் விபரமும் வெளியாகியுள்ளது. அதன்படி டியாகோ காரின் விலை ரூ75,000, டிகோர் காரின் விலை ரூ80,000, அல்ட்ராஸ் காரின் விலை ரூ1,10,000, பஞ்ச் காரின் விலை ரூ85,000, நெக்ஸான் காரின் விலை ரூ1,55,00, கர்வ் காரின் விலை ரூ65,000, ஹாரியர் காரின் விலை ரூ1,40,000, சஃபாரி காரின் விலை ரூ1,45,000 வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த தீபாவளிக்கு கார் வாங்க நினைத்து பட்ஜெட் போட்டவர்கள் இனி அந்த பட்ஜெட்டில் பெரும் தொகையை சேமிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டாடா நிறுவனம் முதன் ஆளாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மற்ற நிறுவனங்களும் இதை பின்பற்றி வரி குறைப்பின் பலன்களை நேரடியாக மக்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பண்டிகை காலம் என்பதால் மக்கள் பலர் கார் வாங்கும் எண்ணத்தில் இருப்பார்கள். இந்த வரி குறைப்பால் பலர் இந்த பலன்களையும் பயன்படுத்தி தங்கள் கார்களை தேர்வு செய்ய முடியும். இதனால் மக்கள் பெரும் அளவில் லாபம் பெற முடியும். வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் வாகன விற்பனை அமோகமாக வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சிறிய ரக கார்களுக்கு 18 சதவீத வரியும், பெரிய ரக கார்களுக்கு 40 சதவீத வரியும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது சிறிய ரக கார்களுக்கு 28 சதவீத வரியும், பெரிய ரக கார்களுக்கு 28 சதவீதத்துடன் சேர்த்து கூடுதலாக 12-22 சதவீத செஸ் வரியும் சேர்த்து வசூலிக்கப்பட்டு வந்தது. செஸ் வரி சேர்க்கும் போது கார்களுக்கு 43-50 சதவீதம் வரை வரி இருக்கும். தற்போது இது குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வரி குறைப்பால் கார் விலையில் 8-10 சதவீதம் வரை வரி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீத வரி குறைந்தால் கார் வலை எப்படி அதை விட குறைவாக குறையும் என பலர் கேட்கிறார்கள். தற்போது எக்ஸ் ஷோரூம் விலை என்பது 28 சதவீத ஜிஎஸ்டி சேர்க்கப்பட்ட விலை தான். அதை கழித்து மீதம் உள்ள பணத்திற்கு தான் 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். ஆதனால் எக்ஸ் ஷோரூம் விலையில் 10சதவீதத்தை கழிப்பது சரியான கணக்கான இருக்காது. தற்போதைய எக்ஸ் ஷோரூம் விலைக்கும், ஜிஎஸ்டி மாற்றப்பட்ட பிறகு வரப்போகும் எக்ஸ் ஷோரூம் விலைக்கும் 7.5-8 சதவீதம் வரை வித்தியாசம் இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது மக்களுக்கு நற்பலன்களை தந்துள்ளது. பலர் இதனால் வாகனங்களை அதிகம் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி வேறு நெருங்குவதால் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









