டாடா கார்கள் எல்லாம் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்குறதுக்கு பின்னாடி உள்ள ரகசியம் இது தான்!
இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான கார்கள் இந்தியாவில் உள்ள பாதுகாப்பு ரேட்டிங்கை பெற பாரத் என்கேப் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த சோதனையில் நல்ல ரிசல்டை பெறும் கார்கள் இந்திய கண்டிஷன்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் பெறுவதால் இந்த காருக்கான விற்பனை அதிகரித்து வருகிறது. இதில் டாடா கார்கள் சிறப்பான ரேட்டிங்கை பெற்றுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பாரத் என்கேப் சோதனை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு பல கார்கள் பாதுகாப்பு சோதனையை செய்துள்ளது. கிட்டத்தட்ட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து கார்களும் சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற கார்களாக உள்ளன. இந்திய கண்டிஷன்களுக்கு ஏற்ப இந்த சோதனை செய்யப்படுவதால் இந்த பாதுகாப்பு சோதனை இந்தியர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

டாடா மோட்டார் நிறுவனம் தான் இந்த பாதுகாப்பு சோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. டாடா நிறுவனத்தின் 8 கார்கள் இதுவரை பாரத் என்கேப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் அனைத்து கார்களும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளன. சமீபத்தில் டாடா நிறுவனத்தின் ஹாரியர் இவி கார் இந்த பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த காரும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான கார் என்ற பெயரை பெற்றது. இப்படியாக டாடா கார்கள் பெற்ற பாதுகாப்பு ரேட்டிங்கை பற்றி பார்ப்போம்.
டாடா ஹாரியர் இவி: டாடா ஹாரியர் இவி கார் பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 32 புள்ளிகளை பெற்றது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 45 புள்ளி களை பெற்றது. முன்பக்க மோதிலில் இந்த கார் 16க்கு 16 புள்ளிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

டாடா ஹாரியர்: கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹாரியர் கார் பாரத் என்கேப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த காரும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32 புள்ளிகளுக்கு 30.08 புள்ளிகளை பெற்றதுது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 44.54 புள்ளிகளை பெற்றது.
டாடா கர்வ்: டாடா கர்வ் கம்பஷன் இன்ஜின் மாடல் கார் பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 29.5 புள்ளிகளை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 43.66 புள்ளிகளை பெற்றுள்ளது.

டாடா நெக்ஸான் இவி: டாடா பஞ்ச் இவி, டாடா நெக்ஸான் இவி ஆகிய இரண் கார்களும் ஒரே நேத்தில் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் பாரத் என்கேப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த கார்கள் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது. இதில் நெக்ஸான் இவி கார் பெரியவர்களுக்கான சோதனையில் 32 புள்ளிகளுக்கு 29.86 புள்ளிகளை பெற்றது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 44.95 புள்ளிகளை பெற்றது.
டாடா நெக்ஸான்: 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் நெக்ஸான் கார் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 29.41 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 43.83புள்ளிகளையும் பெற்றது.
டாடா சஃபாரி: டாடா சஃபாரி கார் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரத் என்கேப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த கார் பெரியர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 30.08 புள்ளிகளை பெற்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பல் 49க்கு44.54 புள்ளிகளை பெற்றது. இந்த
டாடா பஞ்ச் இவி: கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் பஞ்ச் இவி கார் பாதுகாப்பு சோதனையில் உட்படுத்தப்பட்டது. இதில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 31.46 புள்ளியை பெற்றது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 45 புள்ளிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதுகாப்பு அம்சங்கள் ஒரு காருக்கு மிக முக்கியம் அதை சோதித்து பார்த்து தான் ரேட்டிங் வழங்கப்படுகிறது. டாடா கார்கள் அனைத்து 5 ஸ்டார் ரேட்டிங் பெற டாடா கார்களில் பயன்படுத்தப்படும் டாடா நிறுவனத்தின் ஸ்டீல்கள் முக்கியமான காரணம் என கூறப்படுகிறது. இந்த கார்கள் நல்ல ரேட்டிங் பெற என்ன காரணம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?


Click it and Unblock the Notifications









