ஹூண்டாய்க்கு தண்ணி காட்டும் டாடா மோட்டார்ஸ்! மாருதிக்கு அடுத்து டாடா தான் 2வது இடம்!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இல்லை. கார்களை அதிகம் விற்பனை செய்வதில் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடம் யாருக்கு என்பதில் ஹூண்டாய் நிறுவனத்திற்கும், டாடா மோட்டார்ஸுக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியில் பெரும்பாலும் ஹூண்டாய் தான் வெற்றி பெறுகிறது என்றாலும், கடந்த 2024 டிசம்பர் மாத விற்பனையில் ஹூண்டாயை முந்தி டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தை தனதாக்கி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்திய கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸின் விற்பனை கடந்த சில வருடங்களில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் மூலமாக கார்கள் விற்பனையில் ஹூண்டாய் நிறுவனத்துக்கே சவால்விடும் டாடா மோட்டார்ஸில் இருந்து கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் மொத்தம் 44 ஆயிரத்து 221 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

tata cars december sales report

கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 1.73%, அதாவது 750 கார்கள் அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 43 ஆயிரத்து 471 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இவ்வாறு டாடா மோட்டார்ஸின் ஒட்டுமொத்த கார்கள் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், நிறைய டாடா கார்களின் விற்பனை 2023 டிசம்பரை காட்டிலும் பெரிய அளவில் குறைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

குறிப்பாக, டாடா அல்ட்ராஸ் மற்றும் டிகோர் கார்களின் விற்பனை ஆனது பாதியாக குறைந்துள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்தமாக டாடா கார்கள் விற்பனை எண்ணிக்கை அதிகரித்து இருப்பதற்கு காரணம், கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கர்வ் (Curvv) கார் ஆகும். கடந்த டிசம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாடா கார், பஞ்ச் (Punch) ஆகும்.

tata cars december sales report

கடந்த மாதத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 73 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2023 டிசம்பர் மாதத்தில் வெறும் 13 ஆயிரத்து 787 பஞ்ச் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. பஞ்ச் காருக்கு அடுத்து 2வது இடத்தில் நெக்ஸான் 13 ஆயிரத்து 536 கார்கள் விற்பனை உடன் உள்ளது. இந்த வகையில் பார்த்தால், டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை ஆனது 11.44% குறைந்துள்ளது.

இந்த வரிசையில் 3வது இடத்தில் டாடா மோட்டார்ஸின் விலை குறைவான ஹேட்ச்பேக் காரான டியாகோ உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டியாகோ கார்களின் எண்ணிக்கை 5,006 ஆகும். 2023 டிசம்பரில் 4,852 டியாகோ கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இதற்கடுத்து 4வது இடத்தில் டாடாவின் லேட்டஸ்ட் அறிமுகமான கர்வ் 4,994 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.

tata cars december sales report

2023 டிசம்பர் சமயத்தில் விற்பனையில் இல்லாத கர்வ், கடந்த 2024 நவம்பர் மாதத்தில் 5,101 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இந்த வரிசையில் 5வது மற்றும் 6வது இடங்களில் முறையே அல்ட்ராஸ் மற்றும் சஃபாரி கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,866 மற்றும் 1,385 ஆகும். இவை இல்லாமல், கடந்த டிசம்பர் மாதத்தில் 1,307 ஹெரியர் கார்கள் மற்றும் 1,054 டிகோர் கார்களையும் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்கள் விற்பனையில் ஹூண்டாயை டாடா மோட்டார்ஸ் முந்துவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டிலும் சில மாதங்களில் ஹூண்டாயை முந்தி டாடா மோட்டார்ஸ் ஆச்சிரியப்படுத்தி இருந்தது. ஆனால் உண்மையில், டாடா மோட்டார்ஸின் கார்கள் விற்பனை ஆனது எப்போதும் போல தான் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, January 13, 2025, 14:50 [IST]
English summary
Tata cars model wise sales report 2024 december
மேலும்... #tata motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X