டாடா கார்களுக்கு கஸ்டமர்ஸ் குறையுறாங்க... மஹிந்திரா தான் எல்லாத்துக்கும் காரணமா? ஜனவரி சேல்ஸ் ரிப்போர்ட்

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று. குறிப்பாக, கடந்த சில வருடங்களில் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதன் மூலமாக, சில மாதங்களில் கார்கள் விற்பனையில் ஹூண்டாயை முந்தி 2வது இடத்திற்கு கூட டாடா மோட்டார்ஸ் வந்துள்ளது. டாடா மோட்டார்ஸின் விற்பனையை வெளிக்காட்டும் வகையில் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாடா கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகிக்கு அடுத்து கார்கள் விற்பனையில் 2வது இடத்தை பிடிப்பது யார் என்கிற போட்டி கடந்த சில வருடங்களாகவே ஹூண்டாய் (Hyundai) மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு இடையே வலுத்து வருகிறது. இதில் பெரும்பாலான மாதங்களில் ஹூண்டாய் தான் 2வது இடத்தை பிடித்துள்ளது என்றாலும், சில மாதங்களில் டாடா மோட்டார்ஸும் தனது ஆதிக்கத்தை காண்பித்துள்ளது.

tata cars january sales report

கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்தில் கூட கார்கள் விற்பனையில் ஹூண்டாயை டாடா மோட்டார்ஸ் முந்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால், புதிய 2025ஆம் ஆண்டின் முதல் ஜனவரி மாதத்தில் மொத்தமாக சறுக்கி 4வது இடத்திற்கு டாடா மோட்டார்ஸ் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் டாடா மோட்டார்ஸில் இருந்து விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 48,075 ஆகும்.

அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டில் இதே ஜனவரி மாதத்தில் 53,635 கார்களை டாடா மோடார்ஸ் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் இந்த ஆண்டு ஜனவரியில் டாடா மோட்டார்ஸின் கார்கள் விற்பனை ஆனது 10.37% குறைந்துள்ளது. அதாவது, 5,560 கார்களை டாடா நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரியில் குறைவாக விற்பனை செய்துள்ளது.

tata cars january sales report

டாடா மோட்டார்ஸில் இருந்து கடந்த ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார் பஞ்ச் (Punch) ஆகும். கடந்த மாதத்தில் மொத்தம் 16 ஆயிரத்து 231 பஞ்ச் கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால், 2024 ஜனவரியில் கிட்டத்தட்ட 18 ஆயிரம் பஞ்ச் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது.

பஞ்ச் காருக்கு அடுத்து 2வது இடத்தில் நெக்ஸான் 15,397 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. அதுவே, 2024 ஜனவரியில் 17,182 நெக்ஸான் கார்களை டாடா விற்பனை செய்திருந்தது. இவற்றிற்கு அடுத்து 3வது இடத்தில் டியாகோ உள்ளது. 2024 ஜனவரியை காட்டிலும் இந்த ஆண்டு ஜனவரியில் அதிகம் விற்கப்பட்ட ஒரேயொரு டாடா கார், டியாகோ ஆகும்.

tata cars january sales report

2024 ஜனவரியில் 6,482 டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஜனவரியில் 6,807 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து, 4வது மற்றும் 5வது இடங்களில் முறையே கர்வ் மற்றும் அல்ட்ராஸ் கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 3,087 மற்றும் 2,033 ஆகும். இவை இல்லாமல், 1,548 சஃபாரி கார்கள், 1,488 ஹெரியர் கார்கள் மற்றும் 1,484 டிகோர் கார்களையும் டாடா நிறுவனம் கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024 ஜனவரியின் போது கர்வ் கார் விற்பனையில் இல்லை. அப்படியிருந்தும், கடந்த 2025 ஜனவரி மாதத்தில் டாடா நிறுவனத்தால் 48 ஆயிரம் கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்துள்ளது. மேற்கூறப்பட்ட டாடா கார்களின் விற்பனை எண்ணிக்கைகளில் அவற்றின் எலக்ட்ரிக் வெர்சன்களின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, February 7, 2025, 23:11 [IST]
English summary
Tata cars model wise sales report 2025 january
மேலும்... #tata motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X