டாடா கார் கம்பெனி வேலையை ஆரம்பிச்சிடுச்சு! ஷோரூமுக்கு வரவங்க இந்த கார் தான் வேணும்னு கேட்டு வாங்க போறாங்க!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட கார், கர்வ் (Curvv) ஆகும். டாடா நிறுவனத்தின் கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி காராக கர்வ் அறிமுகம் செய்யப்பட்டது. பிரபலமான ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) காருக்கு போட்டியாக விளங்கும் டாடா கர்வ் காரில் புதியதாக டார்க் எடிசன் (Dark Edition)-ஐ கொண்டுவர டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருவதை ஏற்கனவே பார்த்திருந்தோம். இந்த நிலையில், டாடா கர்வ் டார்க் எடிசன் கார் ஒன்று ஷோரூமில் காட்சி தந்துள்ளது.

இதில் இருந்து கர்வ் டார்க் எடிசன் கார்கள் ஷோரூமுக்கு வர துவங்கியுள்ளதை அறிய முடிகிறது. மேலும், இந்த டார்க் எடிசன் காரின் அறிமுகம் மிக விரைவில் நடைபெற உள்ளதையும் இது வெளிக்காட்டுகிறது. தற்போது ஷோரூமில் இருந்து வெளியாகி உள்ள படங்களில் முற்றிலும் கருப்பு நிறத்திலான கர்வ் டார்க் எடிசன் கார்களை பார்க்க முடிகிறது.

tata curvv dark edition

காரின் உடல் மட்டுமின்றி, அலாய் சக்கரங்கள் கூட முற்றிலும் கருப்பு நிறத்தில் உள்ளன. அதேநேரம், காரின் முன்பக்க ஃபெண்டரில் 'Dark' பேட்ஜ்கள் பொருத்தப்பட்டு உள்ளதையும் பார்க்க முடிகிறது. காரின் வெளிப்புறத்திற்கு ஏற்ப கர்வ் டார்க் எடிசனின் உட்புற கேபினும் முழுவதுமாக கருப்பு நிறத்தில் உள்ளது.

காருக்குள் பளபளப்பான கருப்பு நிறத்திலான இன்செர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய டாடா கர்வ் டார்க் எடிசன் காருக்குள் முக்கிய அம்சங்களாக பனோராமிக் சன்ரூஃப், 12.3-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஏசி-க்கு டச் கண்ட்ரோல்கள், ஒளிரக்கூடிய டாடா லோகோ உடன் 4-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பொத்தான் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

tata curvv dark edition

இவற்றுடன், டிரைவ் மோட்கள், இபிபி, ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம், அடாஸ் (ADAS), டிரைவருக்கான வண்ண டிஸ்பிளே மற்றும் பின் இருக்கைகளுக்கும் ஏசி வெண்ட்ஸ் போன்றவையும் கர்வ் டார்க் எடிசனின் உட்புறத்தில் வழங்கப்பட்டு உள்ளன. வழக்கமான கர்வ் காரில் வழங்கப்படாமல், இந்த ஸ்பெஷல் எடிசனில் வழங்கப்பட்டுள்ள அம்சம் என்று பார்த்தால், பின்பக்க ஜன்னல் கண்ணாடிக்கான பிளைண்ட்ஸ் (Blinds)-ஐ சொல்லலாம்.

இந்த விண்டோ பிளைண்ட்ஸ் மூலமாக, காரின் பின்னால் இருந்து காருக்குள் இருப்பவற்றை பார்ப்பதை தடுக்கலாம். புதிய டாடா கர்வ் டார்க் எடிசன் காரை 1.2 லிட்டர் ஹைபெரியன் பெட்ரோல் என்ஜின் அல்லது 1.5 லிட்டர் க்றையோஜெட் டீசல் என்ஜின் உடன் வாங்கலாம்.

tata curvv dark edition

இந்த என்ஜின் ஆப்ஷன்களை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் தேர்வு செய்யலாம். புதிய கர்வ் டார்க் எடிசன் ஆனது கர்வ் காரின் விலைமிக்க அக்கம்ப்ளீஷ்டு (Accomplished) வேரியண்ட்டின் அடிப்படையில் கிடைக்க உள்ளது. அதாவது, அக்கம்ப்ளீஷ்டு வேரியண்ட்டில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் புதிய டார்க் எடிசனிலும் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகுந்த நம்பிக்கை உடன் கர்வ் எஸ்யூவி காரை மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. ஆனால், கர்வ் கார்களின் விற்பனை டாடா எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதன் எதிரொலியாகவே, மக்களை கவரும் விதமாக புதிய கர்வ் டார்க் எடிசன் கொண்டுவரப்படுகிறது. தற்போது இந்த ஸ்பெஷல் எடிசன் கர்வ் கார் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளதால், இதன் அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 2, 2025, 11:39 [IST]
English summary
Tata curvv dark edition starts to reach dealership showrooms
மேலும்... #tata motors #Tata Curvv ICE #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X