இதுக்கு எதுக்கு கோடிக்கணக்குல செலவு பண்ணனும்? டாடா காரை இப்படி எல்லாம் கூட மாத்திக்கலாமா?
மெக்லாரன் (McLaren) போன்ற மிகவும் விலையுயர்ந்த கார்களை வாங்குபவர்களுக்கு தான் தெரியும்... காருக்காக ஒவ்வொரு முறையும் எவ்வளவு பெரிய தொகை செலவிடப்படுகிறது என்பது. பொதுவாகவே, ஆட்டோமொபைல் வாகனங்களில் பொருத்தப்படும் என்ஜினின் அளவையும், ஆற்றலையும் பொறுத்து அதற்கு கொடுக்க வேண்டிய எரிபொருள் அளவும் சரி... வாகனத்திற்கான பராமரிப்பு செலவும் சரி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். என்ஜின் பவர்ஃபுல்லானதாக பொருத்தப்பட்டால், அதனை தாங்கும் வகையிலான இயந்திர பாகங்கள் அதில் வழங்கப்பட வேண்டியுள்ளது. ஒரு சில சொகுசு கார்களின் மைலேஜ் அளவை எல்லாம் பார்த்தால், நமக்கு தூக்கி வாரி போடும்.
மைலேஜ் என்று மட்டுமில்லாமல், சில ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு சாதாரணமான எரிபொருளை கொடுக்க கூடாது. அதற்கென பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் எரிபொருளை கொடுக்க வேண்டும். காரின் என்ஜின் அப்போதுதான் இன்னும் சிறந்த செயல்படுதிறன் உடன் செயல்படும். இதற்காகவே பிரீமியம் தரத்திலான பெட்ரோல் (Petrol)/ டீசல் (Diesel) மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தியாவில் பிரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு சுமார் ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு எரிபொருள் செலவு, பராமரிப்பு செலவு என எல்லாமே சொகுசு கார்களில் அதிகமாக இருப்பதுடன், அவற்றின் விலைகளும் அதிகமாக இருப்பதினாலேயே விலையுயர்ந்த கார்களை செல்வந்தர்களால் மட்டுமே வாங்க முடிகிறது. இருப்பினும், மிடில்-கிளாஸ் மக்களுக்கும் லக்சரி கார் மோகம் இல்லாமல் இல்லை.
இதனாலேயே விலையுயர்ந்த கார்களை வாங்க முடியாதவர்கள் குறைந்தது தங்களது விலை குறைவான கார்களை விலையுயர்ந்த கார்கள் போல் மாற்றிக் கொண்டு பயன்படுத்த முயற்சிக்கின்றனர். அந்த வகையில், இங்கு ஒரு டாடா கர்வ் இவி (Tata Curvv EV) என்கிற எலக்ட்ரிக் கார் (Electric Car) மெக்லாரன் நிறுவனத்தின் கார் போன்று ஆரஞ்ச் நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

டாடா கர்வ் இவி ஆனது மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் கார் கிடையாது என்றாலும், மெக்லாரன் கார்கள் உடன் ஒப்பிடுகையில் விலை குறைவானது ஆகும். உலகளவில் பிரபலமான மெக்லாரன் நிறுவனத்தின் கார்கள் யாவும் அதிவேகத்தில் இயங்கக்கூடிய ஸ்போர்ட்ஸ் கார்கள் (Sports Cars) ஆகும்.
உலகளவில் பிரபலமான ஃபார்முலா-1 (Formula-1) பந்தயத்தில் கூட மெக்லாரன் கார்கள் ஈடுப்படுத்தப்படுகின்றன என்றால், மெக்லாரன் நிறுவனம் எந்த அளவிற்கு பவர்ஃபுல்லான கார்களை உருவாக்குகிறது என்பதை யோசித்து பாருங்கள். மெக்லாரன் நிறுவனம் அவ்வாறு ஃபார்முலா-1 பந்தயங்களில் பயன்படுத்தும் கார்களுக்கு ஆரஞ்ச் நிற பெயிண்ட்டை கொடுப்பது வழக்கம்.

அத்தகைய ஆரஞ்ச் நிறத்தை இந்த டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் அதன் உரிமையாளர் கொடுத்துள்ளார். இதே பப்பாளி ஆரஞ்ச் நிறத்திலான மெக்லாரன் எஃப்1 காரை பிரபலமான ஃபார்முலா-1 டிரைவர்கள் லண்டோ நோரிஸ் (Lando Norris) மற்றும் ஆஸ்கர் பியாஸ்ட்ரி (Oscar Piastri) பந்தயத்தில் ஓட்டினர்.
இத்தகைய நிறத்தை பெற்றிருக்கும் இந்த குறிப்பிட்ட டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் முன்பக்க பொனெட், பம்பர் மற்றும் ஃபெண்டர்கள் உள்பட மொத்த பாடி பேனல்களும் பப்பாளி ஆரஞ்ச் நிறத்தில் உள்ளது. இந்த காரில் நம்மை கவர்வது முன்பக்க கிரில் பகுதியின் டிசைன் ஆகும். கார் மொத்தமும் ஆரஞ்ச் & கருப்பு என்கிற ட்யூயல்-டோன் நிறத்தில் காட்சியளிக்கிறது. காரின் மேற்கூரை மற்றும் அலாய் சக்கரங்கள் கருப்பு நிறத்தில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய ஆரஞ்ச் நிறத்தில் கார்களை நம் இந்திய சாலையில் காண்பது அரிதானது. எத்தனை வாகனங்களுக்கு மத்தியில் இருந்தாலும் இந்த டாடா கர்வ் இவி மட்டும் தனியாக தெரியும். எல்க்ட்ரிக் கார் என்றாலே பெரும்பாலானோர்க்கு நீலம் மற்றும் பச்சை நிறம் தான் நினைவிற்கு வரும். ஆனால், இந்த கர்வ் இவி கார் ஓனர் மட்டும் வித்தியாசமாக யோசித்து ஆரஞ்ச் நிறத்தை கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications









