வெறும் ரூ50,000 தான் அதிகம், ஹாரியர் இவி காரை விட கர்வ் இவியில் இவ்வளவு எக்ஸ்ட்ரா கிடைக்குமா?
டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காரின் வேரியன்ட் வாரியிலான விலை விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த கார் ரூ21.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த கார் அந்நிறுவனம் விற்பனை செய்யும் கர்வ் இவி காரை விட பிரிமியம் விலையில் இதை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. கர்வ் இவி காரின் டாப் மாடல் விலை இந்த காரின் பேஸ் மாடல் விலையை விட வெறும் ரூ50,000 தான் அதிகமாக உள்ளது. இங்கு நாம் கர்வ் காரின் டாப் மாடலில் உள்ள அம்சங்களையம் ஹாரியர் இவி காரின் பேஸ் மாடலில் உள்ள அம்சங்களையும் தான் ஒப்பீடு செய்யப்போகிறோம்.
பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்: டாடா ஹாரியர் இவி காரில் 14.5 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நியோ க்யூ எல்இடி ஆட்டோமொட்டிவ் டிஸ்பிளே உடன் வருகிறது. ஆனால் இது டாப் வேரியன்டில் மட்டுமே கிடைக்கும். பேஸ் வேரியன்டான அட்வஞ்சர் வேரியன்டில் மற்ற டாடா கார்களில் உள்ளது போது 10.25 இன்ச் ஸ்கிரீன் தான் இருக்கிறது. இதுவே டாடா கர்வ் இவி காரின் டாப் வேரியன்டில் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

வென்டிலேட்டட் சீட்டுகள்: டாடா கர்வ் இவி காரில் முன்பக்க சீட்டுகள் வென்டிலேட் செய்யப்பட்ட சீட்டுகளாக வழங்கப்பட்டுள்ளது. இது எம்பவர்டு + வேரியன்டில் மட்டுமே கிடைக்கம் அதன் பேஸ் வேரியன்டான அட்வெஞ்ச் வேரியன்டில் கிடைக்காது. ஆனால் டாடா கர்வ் இவி காரில் முன்பக்க டிரைவர் மற்றும் பயணிகள் சீட்டுகள் 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் ஆப்ஷன் உடன் வருகிறது. ஹாரியர் இவி காரில் டிரைவர் சீட்டை 8 வழிகளிலும், பயணிகள் சீட்டை 4 வழிகளிலும் அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.
ஜேபிஎஸ் ஸ்பீக்கர் சிஸ்டம்: டாடா நிறுவனம் தனது கர்வ் இவி காரின் டாப் வேரியன்டில் 9 ஸ்பீக்கர் கொண்ட ஜேபிஎல் சினிமாட்டிங் சவுண்ட் சிஸ்டத்தை பொருத்தியுள்ளது. இதில் சப்வூஃபர் மற்றும் 9 ஸ்பீக்கர்கள் உள்ளன. ஆனால் ஹாரியர் இவி காரின் பேஸ் வேரியன்ட்டில் 6 ஸ்பீக்கர் கொண்ட ஆடியோ சிஸ்டம் தான் வழங்கப்பட்டுள்ளது.

ஆம்பியன்ஸ் லைட்: டாடா கர்வ் இவி காரில் வாய்ஸ் அசிஸ்ட் செய்க்கூடிய பானரோமிக் சன்ரூஃப் மற்றும் மல்டி மூடு ஆம்பியன்ஸ் லைட்டிங் அம்சங்கள் உள்ளது. ஹாரியர் இவி காரின் பேஸ் வேரியன்டில் இந்த அம்சங்கள் இல்லை. இது போக பிரிமியம் அம்சங்களான வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், ஏர் ஃப்யூரிபையர், ஏக்யூஐ டிளு்பிளே, ஆகிய அம்சங்கள் ஹாரியர் இவி காரின் பேஸ் வேரியன்டில் இல்லை. ஆனால் டாடா கர்வ் காரின் டாப் வேரியன்டில் உள்ளது.
லெவல் 2 அடாஸ்: டாடா கர்வ் இவி காரில் லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் டிப்பார்ச்சர் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், பிளைன்ட் ஸ்பாட் வியூ மானிட்டர், 360 டிகிரி கேமரா லேன் சேஞ்ச் அலர்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ஆனால் டாடா ஹாரியர் இவி காரின் பேஸ் வேரியன்டில் அடாஸ் அம்சம் கிடையாது.

அளவுகள்: ஹாரியர் இவி கார் கர்வ் இவி காரை விட 300 மீமீ அதிக நீளமாகவும், 112 மிமீ அதிக அகலமாகவும், 103 மிமீ அதிக உயரமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல பூட், ஃபிரங்க், மற்றும் வீல் பேஸூம் இந்த காரில்தான் அதகிமாக உள்ளது. இந்த காரில் 65Kwh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது 238 பிஎஸ் பவரை வெளியிடுகிறது. கர்வ் இவி காரில் 55Kwh பேட்டரி பேக் இருக்கிறது. இது 167 பிஎஸ் பவரை வெளியிடுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரண்டு கார்களையும் ஒப்பிடும் போது ஹாரியர் இவி காரின் பேஸ் வேரியன்ட் அளவுகளில் மட்டுமே கர்வ் இவி காரின் டாப் வேரியன்டை விட அதிகமாக இருக்கிறது. அம்சங்கள், வசதிகள் உள்ளிட்ட விஷயத்தில் கர்வ் இவி தான் சிறப்பாக இருக்கிறது. ரூ50 ஆயிரம் அதிகம் கொடுத்தாலும் இவ்வளவு அதிகமான சலுகைகளை இந்த காரில் அனுபவிக்க முடியும் என்றால் யார் தான் கர்வ் இவியை தேர்வு செய்ய மாட்டார்கள்?


Click it and Unblock the Notifications









