5 பேர் சவுகரியமா போகக்கூடிய காரை இனி இப்படியும் வாங்கலாம்! டாடா இந்த முடிவை எடுக்கும்னு எதிர்பார்க்கல

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட கார், கர்வ் (Curvv) ஆகும். இந்திய கார் மார்க்கெட்டிற்கு முற்றிலும் புதுமையான கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி காராக அறிமுகம் செய்யப்பட்ட டாடா கர்வ் காருக்கு கஸ்டமர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், இந்த டாடா காரில் புதியதாக ஒரு அடர் சிவப்பு நிற கலர் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸில் இருந்து சமீப ஆண்டுகளாக தொடர்ச்சியாக கவர்ச்சிக்கரமான கார்களாக வந்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, எஸ்யூவி கார்கள் விஷயத்திலும், எலக்ட்ரிக் கார்கள் விஷயத்திலும் டாடா நிறுவனம் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறது. நெக்ஸான், பஞ்ச் என்பன டாடா மோட்டார்ஸின் சமீப கால சிறந்த தயாரிப்புகள் ஆகும்.

அந்த வரிசையில்தான், கர்வ் என்கிற புதிய காரை கடந்த ஆண்டில் டாடா நிறுவனம் மார்க்கெட்டில் களமிறங்கியது. பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, எலக்ட்ரிக் வெர்சனிலும் டாடா கர்வ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது புதியதாக கலர் ஆப்ஷன் சேர்க்கப்பட்டு இருப்பது, கர்வ் பெட்ரோல்/ டீசல் என்ஜின் காரில் மட்டுமே ஆகும்.

இந்த கர்வ் காரில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் கலர் ஆப்ஷனின் பெயர் 'நைட்ரோ கிரிம்சன்' (Nitro Crimson) ஆகும். இதற்கு முன்பு வரையில், ஒபெரா நீலம், கோல்டு எஸ்ஸென்ஸ், டேடோனா கிரே, பிரிஸ்டைன் வெள்ளை, ப்யூர் கிரே மற்றும் ஃப்ளேம் சிவப்பு உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் டாடா கர்வ் கார் கிடைத்து வந்தது.

தற்போது அவற்றுடன், நைட்ரோ கிரிம்சன் இணைந்துள்ளது. புதிய கலர் ஆப்ஷனை தவிர்த்து டாடா கர்வ் காரில் வேறெந்த அப்டேட்டும் கிடையாது. பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் கர்வ் கார் ஆனது ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டீவ் மற்றும் அக்கம்ளீஷ்டு என 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

கர்வ் காரில் மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதாவது, பெட்ரோல் என்ஜின்களில் மட்டும் 2 விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவையாவன, 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் டைரக்ட்-இன்ஜெக்‌ஷன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆகும்.

இந்த என்ஜின்களுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடர்ன் டாடா காரில் முக்கியமான அதிநவீன வசதிகள் என்று பார்த்தால், லெவல்-2 அடாஸ் (ADAS), 360-டிகிரி கேமரா, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை சொல்லலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய நைட்ரோ கிரிம்சன் கலர் ஆப்ஷனில் டாடா கர்வ் கார் உண்மையில் அருமையாக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். புதிய கலர் ஆப்ஷனினால் இந்த காரின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. விரைவில் இந்த கலர் ஆப்ஷனை அல்லது வேறொரு கலர் ஆப்ஷனை கர்வ் இவி எலக்ட்ரிக் காருக்கும் டாடா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 20, 2025, 12:50 [IST]
English summary
Tata curvv gets new nitro crimson colour option check all details here
மேலும்... #tata motors #Tata Curvv ICE #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X