இப்படியே போனால் டாடா நிறுவனத்தை இழுத்து மூட வேண்டியதுதான்! பார்த்து பார்த்து உருவாக்கிய காரை வாங்க ஆள் இல்லை
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கர்வ் (Curvv) என்கிற புதிய எஸ்யூவி கார் (SUV Car)-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டாடா நெக்ஸான், பஞ்ச் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் டாடா எஸ்யூவி கார் என்பதால், கர்வ் காருக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். அதேபோல் அதிக வரவேற்பு கிடைத்தது என்னமோ உண்மைதான். ஆனால், கடந்த ஜனவரியில் கர்வ் காரின் விற்பனை ஆனது பெரிய அளவில் குறைந்துள்ளது. அதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்தியாவில் கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி கார்கள் மிகவும் புதியவை ஆகும். வெளிநாடுகளில் அத்தகைய கார்கள் விற்பனையில் இருந்தாலும், நம் நாட்டில் அவ்வாறான எஸ்யூவி கார்களை மக்கள் பார்த்தது இல்லை. அவ்வாறான கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி கார்களுள் முதலாவதாக அறிமுகம் செய்யப்பட்ட கார், டாடா கர்வ் ஆகும்.

இதனாலேயே, அறிமுகத்திற்கு முன்னதாகவே இந்த காரின் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியது. கடந்த வருடங்களில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா நெக்ஸான், பஞ்ச் கார்களை போன்று இந்த டாடா காரும் மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தோம். அதேபோல், அறிமுகம் செய்யப்பட்ட 2 மாதங்களில் கர்வ் கார்களின் விற்பனை நல்லப்படியாகவே இருந்தது.
அறிமுகம் செய்யப்பட்ட 2024 ஆகஸ்ட் மாதத்தில் 3 ஆயிரத்து 455 கர்வ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், அடுத்த செப்டம்பர் மாதத்தில் 4 ஆயிரத்து 763 கர்வ் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. அடுத்த அக்டோபர் மாதத்தில், தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் கர்வ் கார்களின் விற்பனை இன்னும் அதிகரித்தது.

அந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரத்து 351 கர்வ் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. தற்போதுவரையில், ஒரு மாதத்தில் அதிக எண்ணிக்கை கர்வ் கார்கள் விற்பனை செய்யப்பட்டது அந்த அக்டோபர் மாதத்தில் ஆகும். ஆனால் அதன்பின் கர்வ் கார்கள் விற்பனை படிப்படியாக குறைய துவங்கியது.
முதற்கட்டமாக, 2024 நவம்பர் மாதத்தில் கர்வ் கார்களின் விற்பனை எண்ணிக்கை 5 ஆயிரத்து 101 ஆக குறைந்தது. 5,351க்கும் 5,101க்கும் பெரியதாக வித்தியாசம் இல்லை என்பதால், டாடா நிறுவனம் இதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்த 2024 டிசம்பரில் இன்னும் கொஞ்சம் குறைந்து, 4,994 கர்வ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், கடந்த 2025 ஜனவரியில் ஒரேடியாக குறைந்து வெறும் 3 ஆயிரத்து 87 கர்வ் கார்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. அதாவது, டிசம்பர் மாதத்தை காட்டிலும் ஜனவரியில் சுமார் 1,907 கர்வ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அறிமுகத்திற்குபின், ஒரு மாதத்தில் குறைந்த எண்ணிக்கையிலான கர்வ் கார்கள் விற்பனை செய்யப்பட்டது கடந்த ஜனவரியில் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பார்த்து பார்த்து பெட்ரோல்/டீசல் மற்றும் எலக்ட்ரிக் வெர்சனில் உருவாக்கிய கர்வ் காரின் விற்பனை இவ்வாறு குறையும் என்று முற்றிலுமாக எதிர்பார்க்கவில்லை. இதனை சமாளிக்கும் பொருட்டு, ரூ.50,000 வரையிலான சலுகைகளை கர்வ் காருக்கு டாடா அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சலுகை ஆனது உங்களுக்கு அருகில் உள்ள டாடா டீலர்ஷிப் ஷோரூமில் வழங்கப்படுகிறதா என்பதை ஒருமுறை உறுதி செய்துக் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications








