இது என்ன காரே பாக்க ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு... இதுல போனா ஊரே உங்களைதான் திரும்பி பாக்கும்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா கர்வ் (Tata Curvv). இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும், ஐசி இன்ஜின் வெர்ஷன் செப்டம்பர் மாதமும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பொதுவாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன்களைதான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும். அதற்கு பின்னர்தான் எலெக்ட்ரிக் வெர்ஷன் களமிறக்கப்படும். ஆனால் இதற்கு முற்றிலும் வித்தியாசமாக, டாடா கர்வ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் முதலிலும், ஐசி இன்ஜின் வெர்ஷன் அதன்பின்னரும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

விற்பனைக்கு வந்து சில மாதங்கள் மட்டுமே கடந்திருந்தாலும் கூட, டாடா கர்வ் கார் உடனடியாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக விட்டது. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான டாடா கர்வ் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) இதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

Tata Curvv

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4,994 கர்வ் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-25 கார்களின் பட்டியலில், டாடா கர்வ் 23வது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை லட்ச 17.49 ரூபாய் ஆக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 21.99 லட்ச ரூபாய் ஆக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Tata Curvv Side Design

டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படுகின்றன. அவை 45 kWh மற்றும் 55 kWh ஆகியவை ஆகும். இதில், முதலாவது பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 502 கிலோ மீட்டர்கள் எனவும், 2வது பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 585 கிலோ மீட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய டிரைவிங் ரேஞ்ச் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே நடைமுறை பயன்பாட்டில் டிரைவிங் ரேஞ்ச் சற்று குறைவாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை இங்கே கவனத்தில் கொள்வது நல்லது. மறுபக்கம் டாடா கர்வ் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை 10 லட்ச ரூபாயாக இருக்கிறது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 19.20 லட்ச ரூபாயாக உள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். டாடா கர்வ் ஐசி இன்ஜின் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.2 லிட்டர் Revotron டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் Hyperion T-GDi டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்டைலான, அதிநவீன வசதிகள் நிறைந்த ஒரு எஸ்யூவி கூபே (SUV coupe) ரக காரை வாங்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டாடா கர்வ் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இந்திய சந்தைக்கு எஸ்யூவி கூபே பாடி ஸ்டைல் கொண்ட கார்கள் புதியவை. எனவே தனித்துவமான ஒரு காரை வாங்க வேண்டும் என விரும்புபவர்களுக்கும், இது நல்ல ஆப்ஷன்தான்.

More from DriveSpark

Article Published On: Friday, January 31, 2025, 17:34 [IST]
English summary
Tata curvv sales report december 2024 price engine battery options
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+