2.5 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை விற்றது இந்த கம்பெனி தானா? இந்திய நிறுவனத்துலேயே கெத்தான நிறுவனம் இதான்!
டாடா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனம் 2.5 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து முக்கியமான சாதனையை படைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் களம் இறங்கியது. அப்பொழுது இந்நிறுவனம் தனது கம்பஷன் இன்ஜின் கார்களையே எலெக்ட்ரிக் கார்களாக மாற்றியது. அதன்பின் எலெக்ட்ரிக் கார்களுக்கு என்று தனித்துவமான ஃபிளாட்பார்மை உருவாக்கி அதன் மூலமும் வாகனங்களை தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை பிரபலமடைய வைப்பதற்கு முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் கார் விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இந்நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் 2.50 லட்சம் வாகனங்களை விற்பனவை செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள 1000 நகரங்களில் இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பலர் தங்கள் இவி வாகன்ஙகளையே பிரதான வாகனமாக பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடாவில் இவி கார் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஆண்டிற்கு 20,000 கி.மீ தங்கள் வாகனங்களில் பயணிக்கின்றனர். இதுவரை விற்பனை செய்த வாகனங்களில் 26,000 வாகனங்கள் 1 லட்சம் கி.மீ தாண்டி இயங்கி வருகிறது. இவி கார்களில் நீண்ட தூரம் பயணிப்பது தற்போது டாடா வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
டாடா இவி கார் வாங்கியதில் பாதிக்கும் மேற்பட்டோர் குறைந்தது 500 கி.மீ தூரமாவது பயணித்துள்ளனர். இதுவரை டாடா இவி கார்கள் மொத்தமாக 12 பில்லியன் கி.மீ பயணம் செய்துள்ளது. இதில்பெரும்பாலும் மாநில அல்லது தேசிய நெடுஞ்சாலைகளாக உள்ளன. இதன் மூலம் 1.7 மில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடு மாசு வெளியேற்றம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளுது. இது சுமார் 800 மில்லியன் லிட்டர் எரிபொருள் செலவையும் மிச்சப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
டாடா நிறுவனம் தற்போது டியாகோ இவி, பஞ்ச் இவி, கர்வ் இவி மற்றும் ஹாரியர் இவி ஆகிய கார்களை தற்போது விற்பனவை செய்து வருகிறது. டாடா நிறுவனம் வீட்டில் இன்ஸ்டாலேஷன் செய்த வகையில் மொத்தம் 2 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்களை நிறுவியுள்ளது. இதில் 20,000 பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளது. இதில் 100 ஸ்டேஷன்கள், 100 மெகா சார்ஜிங் ஹப்கள், 120KW+ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் இவி விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்நிறுவனம் இவி கார் விற்பனையில் புதிய சாதனை மைல் கல்லை எட்டி பிடித்த நிலையில் அதன் மூலம் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளதை காட்டுகிறது. இது அந்நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

Click it and Unblock the Notifications