பெட்ரோல் பங்க் இருக்குதோ இல்லையோ இனி எல்லா ஊரிலும் இது இருக்கும்! டாடாவின் மாஸ்டர் பிளான்

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் என்பது நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயம். இந்தியாவில் எலக்ட்ரிக் கார் (Electric Car)-கள் விற்பனையில் கடந்த சில வருடங்களாகவே ஈடுப்பட்டுவரும் நிறுவனம் டாடா ஆகும். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாகவும் டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. இந்த நிலையில், நாட்டில் சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை தற்போது இருப்பதை காட்டிலும் இரு மடங்கு அதிகரிக்க போவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆனது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் மெதுவாகவே முன்னேற்றம் கண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம், நாடு முழுவதும் விரைவான சார்ஜிங் வசதிகள் இல்லாதது ஆகும். இதன் காரணமாக, எலக்ட்ரிக் கார்களை நீண்ட தொலைவு பயணங்களுக்கு பயன்படுத்த பலர் தயக்கம் காட்டுகின்றனர்.

tata ev to increase charge points

மக்களிடையே இருக்கும் இந்த தயக்கத்தை முதலில் சரி செய்ய வேண்டும் என்பதற்காக டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார் போன்ற முன்னணி எலக்ட்ரிக் கார் நிறுவனங்கள் தங்களது ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றன. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த விஷயத்தில் தீவிரமாக உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த எலக்ட்ரிக் கார்கள் விற்பனை 2 லட்சம் என்கிற மைல்கல்லை சமீபத்தில்தான் கடந்தது. இதனை நினைவுக்கூரும் விதமாக டாடா மோட்டார்ஸ் ஒரு சபதத்தை எடுத்துள்ளது. அதாவது, 2027ஆம் ஆண்டிற்குள் டாடா சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கையை 4 லட்சத்தை தாண்ட வைக்க வேண்டும் என்பதுதான் அந்த சபதம் ஆகும்.

tata ev to increase charge points

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதற்காகவே டாடா.இவி (Tata.ev) என்கிற துணை நிறுவனத்தை கொண்டுள்ளது. டாடா.இவி நிறுவனம் இவி சார்ஜிங் நிலையங்களை நாடு முழுவதும் அமைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. தற்போதைக்கு டாடா இவி சார்ஜிங் நிலையங்களில் பயன்பாட்டில் இருக்கும் சார்ஜிங் பாயிண்ட்கள் 2 லட்சம் அளவில் கூட இல்லை.

அப்படியென்றால், 2027ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கையை டபுள் மடங்கிற்கும் அதிகமாக அதிகரிக்கும் திட்டத்தில் டாடா.இவி உள்ளது. இந்த 4 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்களில் 500க்கும் அதிகமான மெகா சார்ஜர்கள் இருக்கும் என டாடா.இவி தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சார்ஜிங் தொடர்பான புகார்களுக்காக 24x7 செயல்படக்கூடிய சேவையையும் டாடா.இவி அறிமுகம் செய்துள்ளது.

tata ev to increase charge points

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2019ஆம் ஆண்டில் இருந்து இவி சார்ஜிங் மையங்களை நிறுவும் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. ஏனெனில், அப்போதில் இருந்தே எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய டாடா ஆரம்பித்துவிட்டது. இவி சார்ஜிங் மையங்களை நிறுவுவதற்காக டாடா க்ரூப்பில் உள்ள நிறுவனங்களுடன் டாடா மோட்டார்ஸ் கூட்டணி சேர்ந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2027ஆம் ஆண்டிற்குள் 4 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்களை நிறுவ உள்ளதாகவே தற்போது டாடா.இவி நிறுவனம் முடிவெடுத்து உள்ளதே தவிர்த்து, சார்ஜிங் நிலையங்களை அல்ல. ஏனெனில், ஒவ்வொரு சார்ஜிங் நிலையங்களிலும் நிறைய எண்ணிக்கையில் சார்ஜிங் பாயிண்ட்கள் இருக்கும். டாடா நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகள் நிச்சயமாக அதன் எலக்ட்ரிக் கார்களின் விற்பனையை அதிகரிக்க உதவும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 13, 2025, 23:51 [IST]
English summary
Tata ev to increase charge points to 4 lakh by 2027
மேலும்... #tata motors #electric car #charger #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X