எமனே நேர்ல வந்தாலும் இந்த கார் குல தெய்வம் மாதிரி காப்பாத்தும்! இதுக்காக டாடாவுக்கு கோயிலே கட்டி கும்பிடலாம்!
டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகிய 2 கார்களும் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இந்த 2 கார்களிலும் நீண்ட காலமாக ஒரு குறை இருந்து வந்தது. பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் இல்லை என்பதுதான் அந்த குறை.
ஆம், டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களும் டீசல் இன்ஜின் (Diesel Engine) ஆப்ஷன் உடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த குறையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில் நிவர்த்தி செய்தது. அதாவது டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களிலும், தற்போது பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களும் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. அவை பொது பார்வைக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் கூடிய விரைவில் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்பு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்கள் பற்றிய முக்கியமான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. டாடா ஹாரியர், டாடா சஃபாரி ஆகிய 2 கார்களின் டீசல் வெர்ஷன்களும், பாரத் என்சிஏபி (Bharat NCAP) மோதல் சோதனையில், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என 2 தரப்பினருக்குமான பாதுகாப்பிலும், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெற்றிருந்தன.

பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 30.08 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 44.54 புள்ளிகளையும் அவை ஸ்கோர் செய்திருந்தன. இந்த பாதுகாப்பு ரேட்டிங், டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களின் புதிய பெட்ரோல் வெர்ஷன்களுக்கும் பொருந்தும் என பாரத் என்சிஏபி அமைப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எனவே டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி கார்களின் பெட்ரோல் வெர்ஷன்களும், பாரத் என்சிஏபி அமைப்பிடம் இருந்து, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என 2 தரப்பினருக்குமான பாதுகாப்பிலும், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார்களாக மாறியுள்ளன. இது அவற்றின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்க உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று, டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார்களின் புதிய பெட்ரோல் வெர்ஷன்கள், இன்னும் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. அதாவது அவற்றின் விலை (Price) இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் கூடிய விரைவில், விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்பட்டு, அவை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.
டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களின் பெட்ரோல் வெர்ஷன்களிலும், 1.5 லிட்டர் Hyperion TGDi டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 158 பிஹெச்பி பவரையும், 255 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள், பாதுகாப்பில் உலகத்தரம் வாய்ந்தவையாக திகழ்கின்றன. அந்த பெருமையை டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி கார்களின் புதிய பெட்ரோல் வெர்ஷன்கள் தக்க வைத்திருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒரு விஷயம்தான் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








