ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள்ல கிடைக்கிற ஃபீலை இந்த டாடா கார்கள் தருமா! ரூ. 25 லட்சத்துக்கு இப்பேர்பட்ட காரா!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) தன்னுடைய புகழ்பெற்ற கார் மாடல்கள் இரண்டின் சிறப்பு பதிப்பு (Special Edition)-களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஹாரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) இந்த இரண்டு கார் மாடல்களின் சிறப்பு பதிப்புகளையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த இரண்டும் நிறுவனத்தின் அதிக ஆடம்பர அம்சங்கள் நிரம்பிய எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இவற்றிலேயே ஸ்டீல்த் எடிசன் (Stealth Edition) எனும் சிறப்பு பதிப்பே ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார் மாடல்களில் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இதில் ஹாரியர் ஸ்டீல்த் எடிசன் (Harrier Stealth Edition) ரூ. 25.09 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும், சஃபாரி ஸ்டீல்த் எடிசன் (Safari Stealth Edition) ரூ. 25.74 லட்சம் என்கிற ஆறம்ப விலையில் இருந்தும் விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

Tata harrier and safari stealth editions launched

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற 2025 ஆட்டோ எக்ஸ்போ வாயிலாகவே இந்த சிறப்பு பதிப்புகளை முதல் முறையாக காட்சிப்படுத்தியது. இந்த நிலையிலேயே ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் இப்போது அந்த சிறப்பு பதிப்புகளை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களைப் போல அதிக பிரீமியம் ஃபீலை வழங்கும் வசதிக் கொண்ட கார் மாடல்களே இந்த சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகிய கார் மாடல்கள் ஆகும். இந்த இரண்டிலும் சிறப்பு பதிப்புகளை டாடா விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது.

Tata safari stealth edition

சஃபாரி காரில் வழங்கப்படும் ஸ்டீல்த் எடிசனை மேனுவல், ஆட்டோமேட்டிக் மற்றும் ஆட்டோமேட்டிக் 6 சீட்டர் என மொத்தமாக மூன்று விதமான ஆப்ஷன்களில் வாங்கிக் கொள்ள முடியும். அதேவேளையில், ஹாரியர் காரில் வழங்கப்படும் ஸ்டீல்த் எடிசனை இரண்டு ஆப்ஷன்களில் மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும்.

மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு ஆப்ஷன்களே இதில் வழங்கப்படுகின்றன. வழக்கமான பதிப்பிற்கும், இந்த சிறப்பு பதிப்பிற்கும் இடையே சில வித்தியாசங்கள் மட்டுமே தென்படுகின்றன. மிக முக்கியமாக அலங்கரிப்பு விஷயத்திலேயே மிகப் பெரிய மாற்றம் இவற்றிற்கு இடையே உள்ளன. அந்தவகையில் ஸ்டீல்த் எடிசனை மேட் கருப்பு நிறத்தால் நிறுவனம் அலங்கரித்திருக்கின்றது.

கிரில், அலாய் வீல்கள் மற்றும் பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள் என அனைத்தும் கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கருப்பு நிறம் ஓர் ஸ்பெஷல் கருப்பு ஆகும். எனவே கருப்பு நிறத்தை அதிகம் விரும்புவோர் கட்டாயம் புதிய ஸ்டீல்த் எடிசன் கார்களை விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அலங்கரிப்பைத் தாண்டி வேறு எந்த மாற்றத்தையும் இதில் டாடா மோட்டார்ஸ் செய்யவில்லை. எஞ்சின் மற்றும் சிறப்பம்சங்கள் என அனைத்திலும் அதே வழக்கமான ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களில் என்னவெல்லாம் வழங்கப்பட்டு இருக்குமோ, அவையே இதிலும் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

லெவல் 2 அடாஸ், 12.3 அங்குல திரை மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களே இதில் இடம் பெற்றிருக்கும். இந்த சிறப்பு இந்தியாவில் குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. அந்தவகையில், விற்பனைக்காக 27 ஆயிரம் யூனிட்டுகள் வரை இவை விற்பனைக்கு தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. சஃபாரி கார் மாடலின் 27 ஆம் ஆண்டு தினத்தைக் கொண்டாடும் விதமாகவே இந்த சிறப்பு பதிப்பை அது அறிமுகம் செய்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடாவின் இந்த (சஃபாரி மற்றும் ஹாரியர்) இரண்டு கார் மாடல்களும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களைப் போல அதிக பிரீமியம் மற்றும் ஆடம்பர அம்சங்களைத் தாங்கியதாக தயார் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால்தான் பணக்காரர்கள் மத்தியிலும் இந்த கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, February 21, 2025, 18:48 [IST]
English summary
Tata harrier and safari stealth edition launch with prices from rs 25 09 lakh
மேலும்... #tata motors #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X