ரூ1 லட்சம் கம்மி விலையில் இந்த காரை புக் பண்ணலாம்! ஆனா எல்லாருக்கும் இது கிடைக்காது ஏன் தெரியுமா?

டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காரின் புக்கிங்கை அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. இந்த கார் ரூ21.49 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ள நிலையில் இந்த கார் தான் எலெக்ட்ரிக் காரில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட காராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காரை கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான அதிகாரப்பூர்வமான புக்கிங் நேற்று துவங்கியது. இந்த கார் மார்கெட்டில் மிக அதிகமாக எதிர்பார்க்கப்படும் காராக இருக்கிறது. இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட எலெக்ட்ரிக் காராக விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த கார் மொத்தம் 5 விதமான வேரியன்டகளில் விற்பனையாகி வருகிறது.

Tata Harrier ev Booking Open

இந்த கார் அட்வெஞ்சர், அட்வெஞ்சர் எஸ், ஃபியர்லெஸ் பிளஸ், எம்பவர்டு, எம்பவர்டு ஆல் வீல் டிரைவ் ஆகிய வேரியன்ட்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது இந்நிலையில் இந்த காரை புக் செய்பவர்களுக்கு ரூ1 லட்சம் வரை லாயலிட்டி போனஸை வழங்குகிறது டாடா நிறுவனத்தின் காரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களக்கு மட்டும் இந்த சலுகையை பெற முடியும்.

இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்களை தேர்வு செய்ய முடியும். இந்த காரில் 65kWh மற்றும் 75 kWh ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. மேலும் இது சிங்கிள் மோட்டார் மற்றும் டுயல் மோட்டார் ஆப்ஷன்கள் உள்ளது. சிங்கிள் மோட்டார் ஆப்ஷன் 238 பிஎச்பி பவரையும், 315 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

Tata Harrier ev Booking Open

இதில் பெரிய பேட்டரி ஆப்ஷனாக 75 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் உள்ளது. இது டுயல் மோட்டாருடன் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது 313 பிஎச்பி பவரையும், 504 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் 65kWh பேட்டரி பேக் ஆப்ஷனில் 538 கி.மீ ரேஞ்சை வழங்கும் அதே நேரம் 75kWh பேட்டரி பேக்கில் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷனில் 627 கி.மீ ரேஞ்சையும், ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனல் 622 கி.மீ ரேஞ்சையும் வழங்குகிறது. இதனால் நீண்ட தூரம் பயணிப்பவர்கள் இந்த அதிக ரேஞ்ச் தரும் இந்த கார் மக்கள் மத்தியில் அதிகம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Harrier ev Booking Open

இந்த காரின் உட்புறத்தில் பெரிய 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் டாப் வேரியன்டில் மட்டும் 14.53 இன்ச் ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சாம்சங் நியோ க்யூஎல்இடி தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது 10 ஸ்பீக்கர் கொண்ட டால்பி அட்மாஸ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காரின் புக்கிங்கை துவங்கியுள்ள நிலையில் விரைவில் இந்த காரின் டெலிவரியும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விற்பனை மிகச் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 3, 2025, 12:45 [IST]
English summary
Tata harrier ev booking open 627km range awd loyalty bonus
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X