சிங்கிள்-சார்ஜில் 500கிமீ-க்கு ஓடக்கூடிய புது டாடா காரை புக் பண்ண போறீங்களா? இந்த சந்தோஷமான விஷயத்தை கேளுங்க!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), ஹாரியர் இவி (Harrier EV) ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த எலக்ட்ரிக் காராக ஹாரியர் இவி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரின் டெலிவிரிகள் (Delivery) நாடு முழுவதும் உள்ள டாடா டீலர்ஷிப் ஷோரூம்களில் படிப்படியாக துவங்கப்பட்டு உள்ளன.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் தீவிரமாக உள்ள நிறுவனங்களுள் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஒன்று ஆகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு எலக்ட்ரிக் காரை ஆவது அறிமுகம் செய்வது என்கிற கொள்கை உடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன்படி, டாடா மோட்டார்ஸில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் தான், ஹாரியர் இவி ஆகும்.

tata harrier ev

டாடாவில் இருந்து ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஹாரியர் காரின் எலக்ட்ரிக் வெர்சனாக ஹாரியர் இவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரின் டெலிவிரிகள் ஜூலை மாதத்தில் இருந்து துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில், பொதுவாகவே புதியதாக ஏதேனும் கார் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டால், அதனை புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் அடுத்த 1 மாதத்தில் துவங்கப்படுவது வழக்கம். அதன்படி, புதிய டாடா ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரின் டெலிவிரிகள் இந்த ஜூலை மாத மத்தியில் இருந்து துவங்கப்படும் என எதிர்பார்த்தோம்.

tata harrier ev

இந்த வகையில் பார்த்தால், நாம் எதிர்பார்த்ததை காட்டிலும் சற்று தாமதமாகவே ஹாரியர் இவி காரின் டெலிவிரிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம், ஹாரியர் இவி எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் பணிகளே ஜூலை 5ஆம் தேதியில் தான் டாடாவின் தொழிற்சாலையில் துவங்கப்பட்டன. அதன்பின், ஜூலை மாத மத்தியில் இருந்து ஹாரியர் இவி கார்கள் தொழிற்சாலையில் இருந்து ஷோரூம்களுக்கு வர துவங்கின.

அதனை தொடர்ந்து, ஒருவழியாக இந்த ஜூலை மாதம் முடிவதற்கு உள்ளாகவே ஹாரியர் இவி காரின் டெலிவிரிகள் துவங்கப்பட்டுள்ளன. டாடா ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரை பின் சக்கரங்களின் மூலமாக இயங்கும் காராக அல்லது ஒரே நேரத்தில் அனைத்து சக்கரங்களிலும் இயங்கும் காராக வாங்கலாம். அதாவது, எலக்ட்ரிக் மோட்டாரின் இயக்க ஆற்றல் காரின் பின் சக்கரங்களுக்கு அனுப்பப்படும் அல்லது அனைத்து சக்கரங்களுக்கும் அனுப்பப்படும்.

tata harrier ev

இதில், ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தை பெற வேண்டுமெனில், ஹாரியர் இவி காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டை வாங்கப்படும். ரியர்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் வாங்கினாலும் சரி, ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் வாங்கினாலும் சரி ஹாரியர் இவி காரில் ஒரேயொரு மோட்டார் மட்டுமே கிடைக்கும். இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்படும் பேட்டரியை 65kWh அல்லது 75kWh என இரு விதமான ஆப்ஷன்களில் ஒன்றில் வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்சமயம் அதிக பேர் வாங்க விரும்பும் எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றாக ஹாரியர் இவி விளங்குகிறது. இந்த எலக்ட்ரிக் காரின் டெலிவிரிகள் டாடா டீலர்ஷிப் ஷோரூம்களில் துவங்கப்பட்டுள்ளது என்றாலும், தற்போதைக்கு சில ஷோரூம்களில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் படிப்படியாக அனைத்து ஷோரூம்களிலும் துவங்கப்படும்.

Source: Carwale

More from DriveSpark

Article Published On: Wednesday, July 30, 2025, 23:49 [IST]
English summary
Tata harrier ev electric car deliveries started within one month of the start of production
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X